Header Ads



மூதூர் உமர் நெய்னார் புலவர் கவிதைகள்' நூல் வெளியீட்டு வைபவம்


மூதூர் உமர் நெய்னார் புலவர் கவிதைகள்' நூல் வெளியீட்டு வைபவம் சனிக்கிழமை ஜாபிறா மன்ஸில் மண்டபத்தில் மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் கலாபூஷணம் மூதூர் முகைதீன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் கலாநிதி கே.எம்.இக்பால், கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.அலி, கலாபூஷணம் கலைமேகம் இப்றாஹீம், மூத்த எழுத்தாளர்களான திருமலை எஸ்.நவம், எம்.ஏ. சமது, எம்.எஸ்.அமானுல்லா, எம்.ஏ.பரீட், ஏ.எஸ். உபைதுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நூல் முதற் பிரதியை நூலாசிரியர் எம்.எம்.ஏ.அனஸிடமிருந்து மூத்த எழுத்தாளர்  எம்.ஏ.சமது பெற்றுக் கொண்டார் .இதேவேளை, வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூற் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மூதூர் உமர் நெய்னார் புலவரின் கவிதைகள் நூலின்  தொகுப்பாசிரியர் எம்.எம்.ஏ. அனஸ் இப்புலவரின் பேரர் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.