Header Ads



மஹிந்த என்ற தலைமை நடிகருக்கு எல்லாம் தெரியும், நானும் நடிக்கவேண்டியுள்ளது

(JM.Hafeez)

முஸ்லிம்களைப் பிரதி நிதித்துவம் பெறும் கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லீம் சமூகம் தொடர்பான முழு அறிக்கையை மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையிடம் கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹகீம் அவர்கள் தெரிவித்தார்.
(30.8.2013 இரவு) மடவளை சந்தியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டி யிடும் 30 அங்கத்தவர்கள் வரை இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,

நான் அமைச்சர் என்ற ரீதியில் அன்றி கட்சி என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் அதனைக் கையளிக்க நடவடிக்கை எடுத்தேன். எமது மறைந் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் கோட்பாடு ஒன்றின்படி சரியான முடிவை பிழையான நேரத்தில் எடுத்தால் அதுவும் பிழையாகி விடும்' என்பது. எனவே நாம் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கக் கடமைப் பட்டுள்ளோம். அதன்படி செய்துள்ளோம்.

சிலர் எம்மைப் பற்றிக் குறை கூறித்திரிகின்றனர். அவ்வாறு குறை கூறுபவர்கள் நாம் அரசை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. நான் அரசை விட்டு விலகத் தேவையில்லை. எனது அமைச்சர் பதவியைத் தாரை வார்க்கத் தேவையுமில்லை. தந்தவர்கள் தேவையாயின் அதனை பெற்றுக் கொள்ளட்டும். சகல அரசியல் சக்திகளையும் பெற்றுள்ள ஜனாதிபதிக்கு இவை எல்லாம் தெரியும். யாரும் தப்புக்கணக்குப் போடவேண்டாம்.

இந்த அரசு வித்தியாசமான பல்வேறு பாத்திரங்களைக் கொண்ட ஒரு நாடக மேடை. அதில் பலருக்குப் பல்வேறு விதமான பாத்திரங்கள் உண்டு. மேர்வின் சில்வாவிற்கு ஒருவகையான பாத்திரம். அவரது கலியாணக் கதையையும் எமது தலைவர் சகித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதேபோல் விமல் வீரவன்ச ஒரு பாத்திரம். அவர் ஐ.நா.சபைக்கு எதிராக உண்ணா விரதம் இருந்த போதும் எமது தலைவர் பாலூற்றி அவர் விரதத்தை முடித்து வைத்தார். இதனால் நடப்பது ஒன்றுமில்லை என்பதும் அவருக்குத் தெரியும். அதேபோல் எமது அஸ்வர் ஒரு பாத்திரம், றிசாட் இன்னொரு பாத்திரம், சம்பிக ரனவக்க இன்னொறு பாத்திரம். தலைமை நடிகருக்கு இது எல்லாம் தெரியும். எனவே அதிலொன்று நடிகனாக நானும் நடிக்கவேண்டியுள்ளது என்றார்.

எமது சக்தியையும் அடுத்து தேர்தலுக்கான ஆற்றலையும் நாம் வெளிக்காட்டவும் சர்வதேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லவுமே தனியாகப் போட்டி இடுகின்றோம். அமைச்சர் பௌசியை தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாசறையில் வளர்ந்து பின்னர் அதிலிருந்து வெளியேறி அதனை விமர்சிக்கின்றனர். இது பற்றி எனக்கு எது வித கவலையுமில்லை. நான் அவற்றைக் கண்டு கொள்வதே இல்லை என்றார்.


7 comments:

  1. ஆக மொத்தம் நீங்க எல்லாரும் சேர்ந்து நாடகம் நடிக்கிறதுதான் உண்மை! இதுதான் (தலைவர்ட) நேரத்துக்கான சரியான முடிவு போல????????

    ReplyDelete
  2. OH... VERY GOOD MANNER OF SPEAK....CAN WE SAY YOUR CHARACTER IS "VADIVELU" ???????

    ReplyDelete
  3. கணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களே!!!

    இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு நீங்கள் நடந்துகொள்கின்ற அனைத்துமே மிகவும் கண்டனத்துக்குரியவை.

    தலைமை நடிகருக்கு ஏற்றாற்போல் தான் நீங்கள் நடித்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்பது நீங்கள் சொல்லித்தான் நாங்கள் தெரியவேண்டுமென்பதில்லை.... நீங்கள் ஜனாதிபதிக்காக நடிக்கலாம்... அமைச்சர்களுக்காக நடிக்கலாம்.. உங்களை நம்பி வாக்களித்தவர்களுக்காக நடிக்கலாம். ஏன் உங்களுக்காக நீங்கள் நடித்துக்கொண்டிருக்கலாம்... ஆனால் அல்லாஹ் முன்னிலை உங்கள் நடிப்பைக் காட்ட முடியாது..... உங்கள் கபடத்தனமும் சுயநலமுமிக்க அரசியல் அட்டகாசங்கள் இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் தோலுரிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்...

    இலங்கையில் இந்நிமிடம் வரை முஸ்லிம்களுக்கெதிராக நடந்து முடிந்த, நடந்துகொண்டிருக்கின்ற அத்துனை அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் தீர்வு காண வேண்டிய முக்கியதொரு பொறுப்பில் இருக்கும் நீங்கள் இவ்வாறு கோமாளத்தனமானதொரு தலைவராக நடித்துக்ககொண்டிருப்பது உங்களுக்கு வேண்டுமானால் அரசியல் சாணக்கியமாக இருக்கும்.. ஆனால் நல்லதொரு அரசியல் தலைவருக்கு இதைவிட கேவலமானதொரு செயல் இருக்க முடியாது... உங்களது குடுமி இப்பொழுது ஜனாதிபதி கையில் இருக்கிறது என்பதை சூசகமாக சொல்லிக்காட்டியதை இலங்கை வாழ் அத்துனை முஸ்லிம்களும் நன்று புரிந்துகொண்டிருப்பர். மடியில் கணம் இருப்பவன் தான் பயப்படுவான் என்பது உங்கள் விடயத்தில் உண்மை...

    பதவிக்காகவும் செல்வாக்குக்காகவும் யாருக்கு வேண்டுமானாலும் துரோகம் செய்யவும் அநியாயம் செய்யவும் தயங்காத உங்கள் அணுகு முறை உங்களை அதாள பாதாளத்தில் எப்பவோ கொண்டு சென்று விட்டது.

    மக்களுடைய சாபத்தோடும் பதுஆக்களோடும் இறைவன் உங்களை விட்டு வைத்துள்ளது உங்களுக்கான இறுதி காலக்கெடுவாகவும் இருக்கலாம்...

    ReplyDelete
  4. இப்போதாவது இந்த உண்மையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.ஆனால் முஸ்லிம் சமூகம் நீங்கள் நடிகன் என்பதை கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்த அன்றிலிருந்தே புரிந்து கொண்டது.

    ReplyDelete
  5. All Muslim parties are for their own benefit and all they do all their life is ACTING.Why not choose
    the film industry for that Sir? You made a big mistake by choosing to represent Muslims and their
    culture in politics.Why don't you admit that you are being used by your govt with your consent?
    You have admitted that the main actor knows everything and that you are also acting.Well,at the
    end who paid the price? Your community!

    ReplyDelete
  6. Neengal Nadipeergal Anal Awar herovaga ndithu vetriperuhirar neenga nadithu avaridam uthai than padugrirgal pola ithu thewaya matrum engalukkum nadipputhane solringa Illectionukku time irukku meetingalukku time irukku muslimgaludaiya pirachanikku pesa time illa now too late in future u have to go home with ur all mps

    ReplyDelete
  7. Appadiyanal anda adippadaiyil needi amaiccharaga irundu kondu kudhitthulla inda therdal kalamum oru pudiya pattirama ? Sollunga sir.

    ReplyDelete

Powered by Blogger.