மருதானை புகையிரத நிலையத்தில் மூடப்பட்டிருக்கும் சிற்றுண்டிச்சாலையை திறக்க கோரிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
கொழும்பு மருதானை புகையிரத நிலையத்தில் மூடப்பட்டிருக்கும் சிற்றுண்டிச்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு புகையிரதப் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து பயணிகள் குறிப்பிடுவதாவது,
கொழும்பு மருதானை புகையிரத நிலையம் வழமையாக பயணிகளினால் நிறைந்து காணப்படும் ஒரு நிலையமாகும். இருப்பினும,; நீண்ட தூரப் பயணங்களுக்காகவும் குறுகிய தூரப் பயணங்களுக்காகவும் நீண்ட நேரம் புகையிரத்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் தாகசாந்தியை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
ஆதலால், பபணிகளின் நலன்களைக் கருத்திற்கொண்டு நீண்ட நாட்களாக மூடப்பட்டிருக்கும் இச்சிற்றுண்டிச்சாலையை திறக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Post a Comment