உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து, வருடா வருடம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான 07 நாள் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறி ஒன்றை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் இம்முறையும் இப்பயிற்சி நெறியானது இஸ்லாமிய அடிப்படைகள் பற்றிய தெளிவு. இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி, இலக்கு நிர்ணயம், குழுச்செயற்பாடுகள், சுய முன்னேற்றம் போன்ற தலைப்புகளிலான ஆளுமை விருத்தி பயிற்சிகள் மற்றும் உயர்தர பரீட்சையின் பின்னரான மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களை அடைவதற்குரிய தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் என்பன உள்ளடங்கியதாக இப்பயிற்சி நெறி அமைய இருக்கிறது.
செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து சுமார் 08 இடங்களில் நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறிக்கு ஒவ்வொரு நிலையத்திற்கும் தலா 40 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஒவ்வொரு பயிற்சி நெறியிலிருந்தும் தேர்வு செய்யப்படும் திறமையான மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன. Youth Development Program (YDP) பயிற்சி நெறியின் முடிவில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களும் வழங்கப்படும்.
உங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்வதற்கும், YDP பயிற்சி நெறியின் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்கும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உங்கள் மாகாண இணைப்பாளர்களின் விபரம்.
மேல் மாகாணம் : சகோ அப்ராஸ் 0774565789
மத்திய மாகாணம் : சகோ றிஹான் 0771231770
சப்ரகமுவ மாகாணம் : சகோ நுஸ்றான் 0777833930
வடமத்திய மாகாணம் : சகோ தௌபீக் 0774976309
கிழக்கு மாகாணம் : சகோ இப்திகார் 0776284310
திருகோணமலை மாவட்டம் : சகோ ஸாஹித் 0779197575
வடக்கு, வடமேல் மாகாணம் : சகோ முஆஸ் 0777203293
ஊவா மாகாணம் : சகோ புர்கான் 0777284663
தென் மாகாணம் : சகோ அம்ஸர் 0777966643
ஏனைய பிரதேசங்கள் : சகோ உமைர் நஷீப் 0772709411
Please updated anyone, if you have any contact who conducting the leadership programmes with islamical background for girls who supposed to complete their A/Ls.
ReplyDeletePlease contact Umair Naseef on 0772709411. he will transfer it to ladies unit.
ReplyDelete