கொழும்பில் மூடிய அறைக்குள் வெளிநாட்டு தூதுவர்களுடன் நவநீதம் பிள்ளை ஆலோசனை
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கொழும்பிலுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் சிலவற்றின் தூதுவர்களை சந்தித்து இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
சினமன்லேக் விடுதியில் மூடப்பட்ட அறைக்குள் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, மனிதஉரிமைகள் மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் முடி, பிரெஞ்சுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிசொன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ரெர்ஹி லெரினென் ஆகியோர் நேற்றுப் பிற்பகல் நடந்த இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அதிகாரப் பகிர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து, இந்தியத் தூதுவர் வை.கே சின்ஹாவும், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஏனைய மேற்கு நாடுகளின் தூதுவர்களும் கருத்துகளை வெளியிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, தனது பயண நிகழ்ச்சித் திட்டம் குறித்து, வெளிநாட்டுக் தூதுவர்களிடம் நவநீதம்பிள்ளை விபரித்துக் கூறியுள்ளார்.
Good. naveneetham Pillay Didg good conversation with them becos in Government site people to try to hide evrything
ReplyDelete