Header Ads



அமெரிக்கா சிரியாவை தாக்கினால் மத்திய கிழக்கு தீப்பற்றி எரியுமென எச்சரிக்கை

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் விஷக்குண்டுகள் தாக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்தனர். அதற்கான வீடியோ ஆதரங்களும் வெளியிடப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு வீசிய விசக்குண்டு தாக்குதல்களில் 355 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. ஆனால் எதிர்க்கட்கிகளோ 1300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டதாக தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்த நிலையில் உள்ளன. அமெரிக்கா தலைமையில் சிரியா மீது தாக்குதல் நடத்த இப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகளும் தயாராகி வருகின்றன.

அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல் மத்தியத்தரைக்கடலுக்கு விரைந்தது. மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமான் என்ற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைகிறது. இது அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும்.

இந்த கப்பலுக்கு பாதுகாப்பாக செல்லும் மற்ற சிறு கப்பல்களும் ஏவுகணைகளை வீசி தாக்கும். மேலும் ஜோர்டானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள எப்.16 ரக போர் விமானங்கள் பல்முனை தாக்குதலில் ஈடுபடும் என அஞ்சப்படுகிறது.

மத்தியத்தரைக்கடல் டவுலான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சிரியா மீது தாக்குதலுக்கு தயாரான நிலையில் உள்ளது. மேலும் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட் விமானஙகள் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது.

மத்தியத்தரைக்கடலில் பிரிட்டன் ஒரு நீர்மூழ்கி கப்பலை நிறுத்திவைத்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தும் அவசியம் ஏற்பட்டால் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை இத்தாக்குதலுக்கு பயன்படுத்த கூடும். சைப்ரஸ் ஒத்துக்கொண்டால் அதன் ராணுவத்தளத்தை பிரிட்டன் பயன்படுத்தும் என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில், சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்தினால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் தீப்பற்றி எரியும் என சிரியா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்று பேட்டியளித்த சிரியாவின் தகவல் அமைச்சர் ஒம்ரான் அல்-ஜோபி கூறுகையில், ‘தற்போதைய நிலையில் எங்கள் நாட்டு பிரச்சினையில் யார் தலையிட்டாலும் அது தீயை வீசுவதற்கு ஒப்பானதாகும். அந்த தீ சிரியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் எரித்து விடும்.

சிரியா மீது தாக்குதல் நடத்திவிடலாம் என நினைப்பது அவ்வளவு சாதாரனமாக நடக்கக்கூடியது அல்ல’ என்று கூறியுள்ளார்.

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது அபாயக் கோட்டை தாண்டும் நடவடிக்கையாகும் என ஈரானும் எச்சரித்துள்ளது.

‘போர்க்கப்பல்களை அனுப்புவதால் நிலைமை மேலும் தீவிரமாகுமே ஒழிய, கட்டுப்படுத்த முடியாது’ என ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அபாஸ் அரக்ஜி கூறியுள்ளார்.

அந்நாட்டின் ராணுவ துணைத் தலைவர் மசூத் ஜசாயெரி, ‘அபாயக் கோட்டை அமெரிக்கா தாண்டினால் விளைவுகளை வெள்ளை மாளிகை சந்திக்க நேரிடும். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்கள் மக்களிடம் இருந்து தப்பிவிட முடியாது’ என்று கூறியுள்ளார்.

8 comments:

  1. இதுல அமெரிக்க ஒபாமா நல்லவனா இல்லனா சிரியா பஷார் நல்லவனா ...புரின்ஜிகவா முடியள்ளடப்பா

    ReplyDelete
  2. This is to my sunni brothers and sisters

    Iran openly supporting the shia killer ragim of Syria (Bassar).. Even it warns other nations who come to protect the civilians (sunni) who are being killed by even chemicals weapons.

    Do realize the move of shia towards sunni..

    ReplyDelete
  3. america need to control this butcher siriyan president bazeer shiya dog

    ReplyDelete
  4. Dear Brothers...,

    Please understand the whole picture of this drama which is reaching it's peak now. First of all in short, the only culprit who is going to benefit from this war and expand it's territory is the Zionist state of Israel. It's worrying that most people simply don't understand the fact. Isra-Hell is directing the scene behind the stage but we never see them on Media like the Cinema (Never see the director but only actors on screen). Note that Israel already violated and launched attack in Syrian airspace. This chemical attack did happen at night while people are in deep sleep and also Asad is having upper hand in this war. then, there is no need for him to use chemical weapon at the moment. Israel backed Western Media ignites sectarian mentality in the heart of Muslims and get the better of it. We fools believe this propaganda and fight among ourselves. We all know WMD lies in Iraq and 9/11 lies. Just read the history of Iraq when Saddam was in poewer and the chemical weapons used against Kurdish. Same will happen again here in Syria. This is called 'False Flag'. Study what it means.
    However, I am a Sunni and NOT a supporter of any dictators in the middle East. But think what is happening in Egypt? We all know who is behind the scene in Egypt. Don't be fooled that even if Basher Al Asad is removed from power militarily then every thing will be sorted. If that happens, this will make situation far worse and this will give Israel an opportunity to launch an attach and expand it's territory which will pave ultimately the way to False Messiah (Dajjal).
    If Syrians are wise and use their wisdom, Best solution for Syrians to stop this blood bath is to sit and start negotiations and to share the power. Asad is already willing to do this but militants are not prepared as their western masters don't like it.

    Also, we all know that Iran is open and honest supporter of Palestine Issue unlike other hypocrates in the Muslim world. This is one of the main reason that Israel wants to sort both coutries (Syria & Iran) out in one go along with Hisbullah. This is what's happening now in front of our eyes. we have been fooled with sectarian formula so that we can waste out time cursing each other.
    After all, Understand that this is not a war for neither Syrians nor for Islam but for Israel. Study the History of Israel deeply then we will be able to understand the current status where we are.
    Don't forget the Al Quran which says: unless you become a Jew or Christian, they will not be happy with you.....

    ReplyDelete
  5. இன்சாஅல்லாஹ் சிரியா மக்களுக்கு மிக சீக்கிரமே விடிவு காளம் வரும். இரண்டரை வருடம் அசாதுக்கு அல்லஹ் அவகாசம் கொடுத்தான் ஆனால் நாளுக்கு நாள் கொலை செய்து ஏரத்தாள ஒன்னரை லட்சம் மக்களை கொண்டு அழித்துவிட்டான். அதுவும் போதாமல் விச வாயு அடித்தும் கொலைசெய்ய ஆரம்பித்து விட்டான்.எனவே இவர்களுக்கு கூடியசீக்கரம் பாடம் புகட்டியாகவேண்டியுள்ளது.

    யா அல்லாஹ் யாரைக்கொண்டாவது இந்தக்கொலையாளிகளுக்குப்பாடம் புகட்டுவாயாக.....!

    ReplyDelete
  6. america must need to attack bloody bashar al azadh's force

    ReplyDelete
  7. IPPADITHAAN IRAK ATHIPAR SATHAM HUSSAINUM SAWAL VITTAAR KADAISIYIL YANNACHI.INTHE MUDIVUTHAAN SRIYA VUKKUM NADAKKUM

    ReplyDelete
  8. HAMZA AND RASEED YOU BOTH WERE MISLED BY ZIONIST MEDIA OR BY ZIONIST CONTROLLED WAHABEES. COME OUT FROM THIS JAHILIYA AND SEE THE WORLD WITH OPEN MIND THEN YOU CAN SEE THE TRUTH.

    ReplyDelete

Powered by Blogger.