Header Ads



கண்டி மாவட்ட மு.கா. பட்டியலின் முதன்மை வேட்பாளர் கலாநிதி உவைஸ்

(L.A.U.L.M.Naleer)

முன்னாள் உடுநுவர பிரதேச சபையின் தவிசாளரும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இருந்த மத்திய மாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் மேர்வின் சில்வாவின் நெருங்கிய நண்பருமான கலாநிதி உவைஸ் நேற்று பின்னிரவு 1மணியளவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம், உப தலைவர் ஹாபிஸ் நசீர், செயலாளர் ஹசன் அலி ஆகியோர் முன்னிலையில்  எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலுக்கான கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலின் முதன்மை வேட்பாளராக  கைச்சாத்திட்டுள்ளார்.

3 comments:

  1. மு.கா. மடடுமல்ல இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும்தான் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.

    மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு தமது பதவிக் காலத்தில் நல்ல பல சேவைகளைச் செய்திருந்தால் ஏன் இப்படியான கையறு நிலைமைகளுக்கு உள்ளாக வேண்டும்?

    அரசாங்கம் மாத்திரமல்ல, கால் நு{ற்றாண்டுகளாக முஸ்லிம்களின் தனித்துவத் தேசியக் கட்சி என்று மார் தட்டி வரும் மு.கா.வும் இன்று மாற்றுக் கட்சி ஆதரவளரைக் கொண்டுதான் தனது வேட்பாளர் பட்டியலையே பூரணப்படுத்த வேண்டியுள்ளது.

    இதன் மூலம் கண்டி மாவட்டத்திலும் இன்னொரு 'ஆஸாத் சாலி'யை ஸ்ரீ.ல.மு.கா. உருவாக்கியுள்ளது வெட்கக் கேடாகும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. ahaaa..........ahaaa...........ithu thevaiya???????????/

    ReplyDelete

Powered by Blogger.