புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களை நவநீதம் பிள்ளை சந்திப்பாரா?
(கே.சி.எம்.அஸ்ஹர்)
1990 ல் பலவந்தமாக புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எதிர்கொண்ட மனிதவுரிமை மீறல்கள் காய்தல்,உவத்தல் இன்றி விசாரிக்கப்பட வேண்டும்.இம்மக்களின் பிரதேசத்தில் வசிக்கும் உரிமை பறிக்கப்பட்டது எவ்வகையில் நியாயம்.பூர்வீக வாழிடத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை,பள்ளிவாயல்கள் அழிக்கப்பட்டமை, அழகிய கிராமங்கள் காடுகளாக மாற்றியமைக்கப்பட்டமை இதுவெல்லாம் மறக்கமுடியாதவை.
யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,கிளிநொச்சி,மன்னார் போன்ற பிரதேசங்களில் மீளக்குடியேறிய முஸ்லிம்களையும்,தற்காலிகமாக புத்தளத்தில் வசிக்கும் முஸ்லிம்களையும் பிள்ளை அவர்கள் சந்தித்து 90 ல் நடந்த விடயங்களையும்,வடக்கில் மீளக்குடியேறுவதில் உள்ள தடைகள்,சிக்கல்கள் பற்றியும் விசாரித்தறிந்து நியாயமான ஆலோசனைகளை முன்வைக்கவேண்டும்.உண்மையில் நியாயமாக நடப்பவர்களாக நீங்கள் இருப்பின் வெளியேற்றப்பட்டு 23 வருடங்களைக் கழித்துள்ள இம்மக்களை கட்டாயம் சந்திக்கவேண்டும். இம்மக்களின் பிரச்சினை விடயத்தில் இருட்டடிப்புக்கள் இடம்பெற்றதால் இவர்களை ஐ.நா மறந்துள்ளது.
சிறுவர் உரிமைபற்றி பெரிதாக அறிக்கை. விடப்படுகிறது. வெளியேற்றப்பட்ட பச்சிளம் பாலகர்கள் அன்று கண்டக்குளி அகதிகள் முகாமில் இருந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு தரப்படுகிறது.
இதெல்லாம் ஜெனீவாவுக்கு எதிராக தொப்பியும் தாடியுமாக சிங்களவர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்யும் போது யோசித்திருக்கலாமே?
ReplyDelete