மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வமத கலாசார நிகழ்ச்சி
(ஏ.எல்.ஜுனைதீன்)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வமத கலாசார நிகழ்ச்சிகளை நடாத்தும் திட்டத்தில் இன்று 26 ஆம் திகதி திங்கள்கிழமை அதன் பொரளை, கொழும்பு-8 ல் உள்ள தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இஸ்லாமிய கலாசார நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக இடம்பெற்றன.
இவ்வைபவத்தில் றிஹானா சலீம் கிராஅத் ஓதினார். இதனை பானு இப்திகார் ஆங்கில மொழி பெயர்ப்புச் செய்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இவ் இஸ்லாமிய கலாசார நிகழ்ச்சியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜெசந்த பெரேரா, சர்வோதய இயக்கத்தின் தலைவர் டாக்டர் ஏ.ரி.ஆரியரத்ன, பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள், சகோதரர் அட்ரைன், தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் ஆகியோர் இங்கு உரை நிகழ்த்தினார்கள்.
இவ்வைபவத்தில் பிரதம பேச்சாளராக சகோதரர் எம்.ஏ தெஹ்லான் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தமாக நீண்டதொரு விளக்கமான உரை நிகழ்த்தினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆனந்தராஜா, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம். ஜெமீல், அம்பாறை மாவட்ட சமாதானத்திற்கான சமயங்களின் பேரவைத் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் கணக்காளர் ஏ.எம். ஹில்மி உட்பட பல பிரமுகர்கள் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.
மாணவ, மாணவிகளால் நடாத்தப்பட்ட இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் சபையோரை வெகுவாகக் கவர்ந்தன. பக்கீர்பாவா ஹலால்தீனின் றபான் நிகழ்ச்சியும் இங்கு இடம்பெற்றது.
islamiya kalachara nihalchiil islamiya kalachar aaadai illai,islamiya kalacharathai walarka iwarkaluku muthalawathu islamiya kalacharathai katrukkodukkawendum.
ReplyDelete?????
ReplyDeleteஇஸ்லாமிய கலாச்சார நிகழ்ச்சி யென்று சொல்லி உண்மையான இஸ்லாமிய கலாச்சாரத்தை சீரழிக்கவேண்டாம். மேடை நிகழ்ச்சிகளில் பெண்பிள்ளைகளை நிகழ்ச்சிக்கு ஏற்றும் போது எமது இஸ்லாமிய கலாச்சார உடைகளை தேர்தெடுப்பதில் கவனமாக இருந்தால் அதுவே எமது கலாச்சாரத்தை மற்றய மக்களுக்கு எத்திவைக்க சிறந்த வழிமுறையாகும்.
ReplyDelete