செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஒரு இலட்சம் பேர் விண்ணப்பம்
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 'தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்' என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பையொட்டி 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய் கிரகத்தில் தங்க விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர். அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர்.
செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை தி மார்ஸ் ஓன் புராஜக்ட் தலைமை அதிகாரி பால் லேனல் டிரப் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே பூமியில் இருந்து செல்லும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் செல்ல மிகவும் கடினம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மனிதர்கள் வரும்போதும் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
'''''பூமியில் தான் மனிதன் வாழ முடியும்'''''' :
ReplyDeleteவானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும்440 பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும் போது அவர்களைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்(42:29)
2:36. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன''175 என்றும் நாம் கூறினோம்.
7:10. பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!175
7:24. "(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன''175 என்று (இறைவன்) கூறினான்.
25. "அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான்.175
30:25. அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப் போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.175