Header Ads



ஆஸாத்தின் ரசாயன தாக்குதலில் தூக்கத்திலேயே உயிர்போனது


டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ராணுவத்தினர் விஷ தன்மை மிகுந்த ரசாயன குண்டுகளை வீசியுள்ளனர். தூக்கத்தில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள் உள்பட 1,600க்கும் மேற்பட்டோர் நச்சுக்காற்றை சுவாசித்து பரிதாபமாக இறந்தனர். விஷ வாயுவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தூக்கத்திலேயே அவர்கள் இறந்தது தெரிய வந்துள்ளது. ஏனெனில், இறந்தவர்கள் உடலில் எந்த காயமும் இல்லை. இந்த பயங்கர தாக்குதலுக்கு ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், சிரியா அரசும், அதற்கு ஆதரவாக உள்ள ரஷ்யாவும் ரசாயன ஆயுத தாக்குதலை மறுத்துள்ளன.

ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான சிரிய தேசிய கூட்டணி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு துறை செயலர் வில்லியம் ஹாக், இந்த பிரச்னையை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. -

4 comments:

  1. யா அல்லாஹ் இக்கொடியவர்களிடமிருந்து முஸ்லிம்களைக்காப்பாற்றி இக்கொடியவர்களை நீயே உரிய கூலியையும் வழங்கிவைப்பாயாக.

    ReplyDelete
  2. Did the great king of Saudi open his mouth regarding this?

    ReplyDelete
  3. This is truly the work of Yahoodis (Israel)and their Arab friends.

    ReplyDelete
  4. யாஅல்லாஹ் !இம்மக்க​ளை ​கோடுமயார்களின் அணியாயத்திலிருந்து பாதுகாப்பயாக் எம்மீது இரக்கம் காட்டாதவர்க​ளை எமது அதிகாரிகளாக ஆக்கிவிடா​தே,,,,,

    ReplyDelete

Powered by Blogger.