Header Ads



இனவாதமும்,மதவாதமும் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லை - றிசாத் பதியுதீன்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இனவாதமும்,மதவாதமும் ஒரு போதும் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லையென தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எந்த சமூகத்தையும் அடக்கி ஆளும் அதிகாரம் இம்மண்ணில் எவ்வாறுக்கு வழங்கப்படவில்லையென்று கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி தொடர்பில் பிரதேச மட்டத்திலான தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு  கூறினார்..மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது,

உரிமைகளை வென்றெடுப்பதற்காக மக்களை பிழையாக வழி நடத்த முடியாது.மக்களின் சுதந்திரத்தையும்,அவர்களது அபிலாஷைகளையும் இடைமானம் வைக்கவும் முடியாது.இந்த நாட்டில் பிற்நத ஒவ்வொருக்கும் இந்த நாட்டின் உரிமையை அனுபவிக்க முடியும்.இந்த உரிமைகளை அனுபவிக்க விடாது அதற்கு தடையேற்படுத்துவது என்பது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

மன்னார் மாவட்டத்தில் வாழும் எந்த இனத்தவர்களும்,எவருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்ல.அவ்வாறான அடிமை சாசனம் எவருக்கும் எழுதி கொடுக்கப்படவுமில்லை.இன்று நாம் தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுத்தால்,அல்லது எம்மீது நேசமும்,பற்றும் கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ள வரும் மக்களை,துரோகிகளாக விமர்சிக்கும் நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையினால் மக்களுக்கு சென்றடைய வேண்டிய எத்தனை சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்ட வேண்டும்.இந்த சலுகைகளையும்,அதனோடு சேர்ந்த உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் பெரும் போராட்ஙட்களை செய்ய வேண்டும்.

எதிர்வரும் மாகாண சபை தேர்தலானது இந்த மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுகப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை மேலும் அதிகரிப்பதோடு,எதிர்கால சமூகத்தின் வளமான வாழ்வுக்கும் வழி அமைக்கும் என்பதை உறுதியாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன்.இன்று வடக்கில் காணப்படும் அரசியல் மாற்றமானது ஆளம் ஜக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் வெற்றியினை உறுதி செய்வனவாக உள்ளது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

2 comments:

  1. Hon. Minister indirectly agrees that the government will not succeed in the forthcoming election.

    ReplyDelete
  2. அப்ப மஹிந்த டீம்தோக்குதா ?

    ReplyDelete

Powered by Blogger.