Header Ads



தலதா மாளிகையின் தீர்மானத்தை முஸ்லிம் கவுன்சில் வரவேற்கிறது

சமயங்களுக்கு இடையிலான சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக, இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, தலதா மாளிகையின் தம்மதீப சபை மேற்கொண்ட தீர்மானத்தை இலங்கை முஸ்லிம் கவுன்சில்வரவேற்றுள்ளது.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளின் தலைமையில் அண்மையில் கூடிய தலதா மாளிகையின் தம்மதீப சபையின் நிறைவேற்றுக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.

இதன்படி விரைவில் இந்து மற்றும் இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது.

நாட்டினுள் சமயங்களுக்கு இடையிலான சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைள் தொடர்பில் இதன் போது பேசப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள முஸ்லிம் கவுன்சில், இதனால் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகளை தணிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. sfm

1 comment:

  1. அங்கேயும் போய் போதப்பமல் ஏதோ உருப்படியா பேசி நல்ல முடிவுகளை காண நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.