Header Ads



ரஷ்யாவின் போர் கப்பல்களும் தயார்..!

சிரியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்நாட்டுக்கு உதவ, ரஷ்யா, போர் கப்பல்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி மேரி ஹார்ப் கூறியதாவது: சிரியா அதிபர் பஷர்-அல்-ஆசாத்தின் உத்தரவில்லாமல், ரசாயன தாக்குதல் நடந்திருக்காது. அவருடைய உத்தரவில்லாமல், இந்த தாக்குதல் நடந்திருந்தாலும், அதிபர் என்ற முறையில் ஆசாத், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து, ஐ.நா.,பாதுகாப்பு சபையை நாடப்போவதில்லை. ஏனென்றால், சிரியாவுக்கு, ரஷ்யா பக்கபலமாக இருக்கிறது. இந்த விஷயத்தில், ஐ.நா., பாதுகாப்பு சபையில் ரஷ்யா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, தாக்குதலை நடத்த விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடும். இவ்வாறு மேரி கூறினார்.

ஈரான் அச்சம் : சிரியா மீது போர் தொடுக்கப்பட்டால், வளைகுடா பகுதியில் பதற்ற நிலை ஏற்படும், எனவே, இந்த தாக்குதலை தடுக்க, ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி, ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

ரஷ்ய போர்க்கப்பல் : சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க உள்ளன. எனவே, சிரியாவின் நட்பு நாடு என்ற முறையில், ரஷ்யா, தன் பங்குக்கு, நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு கப்பல்களையும், ஏவுகணை தாங்கிய கப்பல்களையும், அனுப்ப திட்டமிட்டுள்ளது.

3 comments:

  1. AALUKKAAL MIRADDI KONDU KAALATTHAI KADATTHA VENDIYATHU THAAN....

    ReplyDelete
  2. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நேச நாடுகள் தங்களுக்கு ஆதரவான நாடுகளைப் பாதுகாப்பதுடன்; தங்களுக்கு எதிரான நாடுகளை குறி வைத்து அந்நாடுகளை நாசப்படுத்தும் வேளைகளில் ஈடுபடுகின்றன.

    இவற்றையெல்லாம் நேட்டோ சார்பான ஐ.நா.சபை குருட்டுத்தனமான தீர்மானங்களை எடுத்து உலகத்தை நாசப்படுத்துகின்றன. இவற்றை தடுக்க ஏனைய நாடுகள் கைகட்டிக்கொண்டிருப்பதேன்.

    நீங்களும் ஒன்றுபடுங்கள்! இந்த அநியாயங்களைத் தடுக்க போரிடுங்கள்.

    ReplyDelete
  3. இப்படித்தான் சூடானுக்கும் லிபியாவுக்கும் கதை விட்டு கடைசியில் கைவிட்டார்கள் !

    ReplyDelete

Powered by Blogger.