Header Ads



நவநீதம்பிள்ளையிடம் சிண்டு மூட்டிவிட்டு, நாட்டை காட்டிக் கொடுக்க தேசத்துரோகிகள்

நவநீதம்பிள்ளையிடம் சிண்டு மூட்டி விட்டு, நாட்டை காட்டிக் கொடுக்க தேசத்துரோகிகள் தமது வாய்களை கழுவி கற்களை துளக்கி கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் அவ்வப்போது நாட்டை காட்டிக் கொடுத்த தேசத்துரோகிகள் பற்றி குறிப்புகளை காணமுடிவதாகவும்  தற்போதும் அப்படியான தேசத்துரோகிகள் இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

எப்படியான அரசியல் பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டை காட்டிக்கொடுப்பது கீழ்த்தரமான நடவடிக்கையாகும். வடக்கு, கிழக்கில் சிங்கள மக்களுக்கே தற்போது அநீதி ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு பல உதாரணங்களை முன்வைக்க முடியும்.

எனினும் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாக கூறி தவறான தோற்றத்தை காட்டி குறுகிய அரசியல் லாபம் பெற முயற்சித்து வருபவர்களுக்கு  நவநீதம்பிள்ளையின் வருகையானது அரச விழாவாக மாறியுள்ளது.

எனினும் அறிவுள்ள ஒருவர் என்ற வகையிலும் பக்கசார்பற்ற வகையில் செயற்படும் நிறுவனம் ஒன்றின் பொறுப்புக் கூறும் பதவியில் இருப்பவர் என்ற வகையிலும் பிள்ளை அம்மையார் கபடர்களின் பொய்களில் சிக்கி கொள்ள மாட்டார் என நம்புவதாகவும் மேதானந்த தேரர் கூறியுள்ளார்.  Gtn

3 comments:

  1. வந்திட்டார்யா இப்போதைய ஹிரோக்களில் ஒருவர்.

    ரவுடித்தனமும் காடைத்தனமும் நாட்டில் துரோகத்தனமும் யார் செய்கின்றார் என்பதை உண்மையானவன் எவனாவது இருந்தால் நேர்மையாககணக்கெடுத்துப்பார் உனக்கு புரியும் நாட்டில் எங்கெங்கு என்னென்ன நடக்கின்றதென்பது. அதைவிட்டு சும்ம படம் காட்டுவதை நிறுத்து.

    ReplyDelete
  2. so you mean to say Tamils doesn't have any problems in this country??. you people made all the possible way to the minorities one another way. if you continue in this manner, the world will come and ask and act.

    ReplyDelete
  3. நவிபில்லையை கண்டதும் மஞ்சள் துனிக்கு, மஞ்சள் காய்ச்சல் வந்துவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.