புற்றுநோயை காட்டிக் கொடுக்கும் கண்கள்
கண்களை உடம்பின் கண்ணாடி என்று எவ்வளவு அர்த்தத்துடன் கூறியிருக்கிறார்கள் என்பதை இதை படித்ததும் தெரிந்து கொள்வீர்கள். உடலுக்குள் எங்கே என்ன கோளாறு என்றாலும் அதைக் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். அந்த வகையில் புற்றுநோயின் அறிகுறிகளையும் கண்களில் கண்டுபிடிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா... ஆமாம் உடலின் எந்த பாகத்தில் புற்று நோய் வந்தாலும் அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்கும் என்கிற விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம் அது பற்றி விரிவாக பேசுகிறார்.
கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்சனை இப்படி வயசானவர்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தறவங்கள் தான் அதிகம்.. வயசானா பார்வை மங்கறதும் பூச்சி பறக்கறதும் சகஜம்தான்னு விட்டுருவாங்க. ஆனா அதெல்லாம் அவங்க உடம்புல எங்கேயே புற்றுநோய் தாக்கியிருக்கிறதுக்கான அறிகுறியா இருக்கலாம்னு யாருக்கும் யோசிக்கத் தோணாது.
நடுத்தர வயதுக்கு பிறகு பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்கிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக்கங்கள் மாறிப்போறது, இருமல் ரத்தத்தோட வெளியேறும் சளி இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி கண்களிலும் அதை கண்டுபிடிக்கலாம்.
மனித உடம்புல அதிகப்படியான ஆக்சிஜன், ரெட்டினானு சொல்லற விழித்திரைக்குத்தான் போகுது. அந்த ஆக்சிஜன் விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோராயிடுங்கிற பகுதி மூலமா தான் விழித்திரைக்குப் போகும்.. உடம்போட ரத்த ஒட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இனைஞ்சு போகும். அதனால் ரத்தத்துல உள்ள புற்றுநோய் செல்கள், கோராயிடு மூலமா விழித்திரைக்கும் போகும். விழித்திரையில தண்ணீர் கசிஞ்சி விழித்திரை முன்னாடி வரும். திடீர் பார்வை குறைபாடு தான் இதோட அறிகுறி..
சிலருக்கு non hodgkin's lymphoma னு சொல்லக்கூடிய ரத்த புற்றுநோய் இருக்கும். கண்கள்ல பூச்சி பறக்கிறது. வெளிச்சம் அதிகமாக தெரியறதையும் முதுமையோட அறிகுறிகளாகவும், மறதி, நடக்கும் போது ஏற்பட்ட பிரச்சனைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்பு படுத்தி பார்த்து வேற வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால தான் அதை சரியாக கண்டுபிடிக்க முடியும்.
பி ஸ்கேன் மூலமாக விழித்திரையை பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங்கிறதை உறுதி செய்து அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும் என்கிற டாக்டர் வசுமதி கண்களில் தென்படுகிற எந்த சிறு பிரச்சனைகளையும் அலட்சியப்படுத்துவது ஆபத்தானது என முடிக்கிறார் முத்தாய்ப்பாக.
dr's conduct place please.
ReplyDelete