லபுதுவ உயர் தொழில்நுட்ப பொறியியல்பீட முஸ்லிம் மாணவர்களின் ஏற்பாட்டில் நிகழ்வுகள்
காலி லபுதுவ உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் பொறியியல் பீட (HNDE) முஸ்லிம் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இனங்களுக்கிடையிலான நல்லினக்கப்பாட்டையும் சகவாழ்வையும் ஏற்படுத்தும் நிகழ்வுகள் பணிப்பாளர் 'விமாலி விக்கிரமசிங்க' தலைமையிலும் மும்மத தலைவர்களின் பங்கேற்புடனும் மாணவர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் பங்களிப்புடனும் அண்மையில் காலி லபுதுவ உயர் தொழில் நுட்ப வளாகத்தில் நடைபெற்றது.
இஸ்லாம் மதம் சார்பாக மாத்தறை நூறாணியா அறபுக்கல்லுரியின் அதிபரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவருமான 'அஷ்-ஷெய்க் அல் ஹாபிழ் அர்கம் நூரானி' தாருல் உலும் இஸ்லாமியா அவர்களும் பௌத்த மதம் சார்பாக 'கேகாலை பன்னியாராம தேரர்' அவர்களும் தமிழ் மதம் சார்பாக 'சுவாமி தட்சனமூர்த்தி' அவர்களும் கலந்து கொன்டனர்.
அல் ஹாபிழ் அர்கம் நூரானி அவர்களின் உறையில் 'இவ்வுலகில் மனிதர்களை வழி நடத்துவதையும் நேரான வழியை காட்டுவதையும் அல்லாஹுத் தாஆலா மனிதர்களிடம் பொறுப்பு கொடுத்து இருப்பதாகவும் மனிதர்கள் படைப்புகளில் சிறந்த படைப்பு எனவும் மற்றைய அனைத்து படைப்புகளும் மனிதர்களுக்காக படைக்கப்பட்டன எனவும் தெரிவித்தார் மேலும் மனிதர்களுடைய நோக்கம் சமூதாயத்துக்கு தன்னால் ஆன நட்கருமங்களை செய்ய வேண்டும் எனவும் உலகில் நடைபெறும்அனைத்து பிரச்சினைகளுக்கு காரணம் மனிதநேயம் இல்லாமை எனவும் குறிப்பிட்டார்.' அதனை தொடர்ந்து கேகாலை பன்னியாராம அவர்களின் உரையும் சுவாமி தட்சனமூர்த்தி அவர்களின் உரையும் இடம்பெற்றது.
Post a Comment