அக்கரைப்பற்று அல்-முனீறா பாடசாலையின் மாணவர் மாதிரிச் சந்தை
(கே.சீ.எம்.அஸ்ஹர்)
அக்கரைப்பற்று வலய பாடசாலையான,அட்டாளைச்சேனை அக்/அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையின்,தரம் 03 ஆரம்ப பிரிவு ஆசிரியர்களாலும்,மாணவிகளாலும் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சந்தை கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கலாசாலை அதிபர் அல் ஹாஜ் ஆ.ஐ.ஆ. அப்துஸ்ஸலாம்,பிரதி அதிபர் ஜனாப்.ஆ.ர்.ஆ.றஸ்மி,ஆரம்ப பிரிவு வலயத் தலைவர் ஜனாப்.யு.சு.ஆ.றிம்ஸான் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள்,மாணவிகள் போன்றோர்; கலந்து கொண்டார்கள்.
தரம் மூன்றில் கற்பிக்கும் ஆசிரியைகளான திருமதி.N.பாலேந்திரா, திருமதி.ஆ.சர்மினா, திருமதி.மு.சிஹாரா,ஆகியோhரின் முன்னேற்பாட்டில் மாணவிகள் சந்தைப் பொருட்களை விற்பனை செய்தனர்.அதிபர்,ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவிகள் என பலரும் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்ததை காணக் கூடியதாயிருந்தது.
இவ்வாறான செயற்பாடு மூலம் சிறந்த சந்தை செயற்பாடு,கொடுக்கல் வாங்கல் அனுபவம் என்வற்றை ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment