காத்தான்குடியில் மீள நிர்மாணிக்கப்பட்ட ஸகீனத் பள்ளிவாயல் திறந்து வைப்பு (படங்கள்)
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி டீன் வீதியில் போதிய வசதிகளின்றி காணப்பட்ட மஸ்ஜிதுஸ் ஸகீனத் பள்ளிவாயல் ஸ்ரீலங்கா ஹிறா பெண்டேஷனின் ஏற்பாட்டில் நிதாஉல் கைர் நிறுவனத்தின் அனுசரணையுடன் மீள நிர்மாணிக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக போது காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் அப்துல்லாஹ் ரஹ்மானி கௌரவ அதிதிகளாக சவுதி அரேபிய நிதாஉல் கைர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத்,பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சவூதி அரேபிய அறிஞர்கள்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் அப்துல்லாஹ் ரஹ்மானியினால் பள்ளிவாசல் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்ட்டது.
Post a Comment