ஆபாச ஆட்டம் பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சையில் சிக்கினர்
ஆபாச ஆட்டம் பார்த்த மூன்று பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். சிம்பாப்வே செல்லும் பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் , இரண்டு “ருவென்டி20 ” , மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் “ ருவென்டி 20” 23 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில் சிம்பாப்வே புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் லாகூரில் உள்ள தியேட்டரில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்நு வீச்சாளர் ஜுனைட் கான் , அன்வர் அலி , ஆசாத் அலி ஆகியோர் நடிகைகளின் ஆபாச நடன நிகழ்ச்சியைப் பார்த்துள்ளனர்.
இதனை தனியார் ரி.வி ஒன்று படம் பிடித்து அம்பலப்படுத்தியது. இது குறித்து அங்குள்ள நடனப் பெண் ஒருவர் கூறுகையில் “ ஜுனைட் கானை இங்கு பார்த்தது மிகவும் வியப்பாக இருந்தது ” என்றார்.
சமீபத்தில் அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட மொயின் கான் வீரரர்களின் ஒழுக்கம் குறித்துப் பேசி வரும் நிலையில் இப்பிரச்சினை பூதாகாரமாகியுள்ளது.
veettil erunthu parthirunthal maattierukkamaatarhal.ellorukkum chanse kidathchal ippadithaan.pakisthan verarhal entral oru padi mealeathan.
ReplyDeleteivarhal muslimkelaaa
ReplyDeleteivarhel muslimkela allethu muslimkelin virothihelaa iravaa iverheluku hithaayeth koduppaayahe
ReplyDeletenitcheyemaahe
ReplyDelete