சொந்த மண்ணில் சுஜுது செய்ய இடம் தாருங்கள் ......
எங்களூர் சாலையொரத்தில் அப்புஹாமி மாமா
சுருள் மடித்து கடலை தந்த ஞாபகங்கள்
ஹஜ்ஜுப் பெருநாளன்று ............. புத்தே....
வாப்பாவின் பெருவிரல் பிடித்த என்னை
பாங்கிற்கு பொருள் சொல்வார்
பாவமேதும் செய்ய மாட்டேன் என்பார்
தொதல் முறுக்கு வேண்டுமென்பார்
நோன்புக் கஞ்சி சுவைத்துக் குடிப்பார்
பெருநாள் என்றால் அப்புஹாமி மாமா தான்
முதல் எஸ்.எம்.எஸ் அனுப்புவார்.
அன்று கடை திறந்து கிடந்தது
மாமாவை காணவில்லை
சொல்லி அழ வாப்பாவுமில்லை.
ஜஸ்ரி ஜவாப்தீன் (நளீமி)
Post a Comment