காலணிகளை விரும்பும் பெண்கள், அதிகம் பயன்படுத்தாத அவலம்
லண்டனை சேர்ந்த தனியார் நிறுவனம், நடத்திய
ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் ஆடை, ஆபரணங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை
வாங்குவதில் அதிகம் செலவு செய்கின்றனர். பெரும்பாலான பெண்கள், காலணிகளை விரும்பி
விலை கொடுத்து வாங்குகின்றனர். 41 சதவீதம் பெண்கள், அதிக விலையுள்ள காலணிகளையே
விரும்பி வாங்குகின்றனர். சராசரியாக ஒரு பெண், ஓராண்டில், 20 ஜோடி காலணிகளை
விலைக்கு வாங்குகிறார். எனினும், அதில் நான்கில் மூன்று பங்கு காலணிகளை
பயன்படுத்துவதில்லை. பார்த்ததும் பிடித்து விடுவதால், அளவு, விலை போன்ற எதைப்
பற்றியும் யோசிக்காமல் வாங்கி விடுவதால் இந்நிலை ஏற்படுகிறது. விலைக்கு வாங்கிய
பின், அளவு சரியில்லாமலும், அதிக விலை கொடுத்து வாங்கியதால், தொலைந்து விடுமோ என்ற
அச்சத்திலும், பெண்கள் விலை மதிப்பான காலணிகளை வீட்டிலேயே வைத்து பாதுகாக்கின்றனர்.
சராசரியாக, நான்கில் ஒரு பங்கு, காலணிகளையே பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து,
2,000 பெண்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 86 சதவீதம் பெண்கள், தாங்கள்
வைத்துள்ள அனைத்து காலணிகளையும் பயன்படுத்தியதில்லை என, கூறியுள்ளனர். பெண்கள்
விரும்பி, அதிகம் செலவழிக்கும் பொருட்களில், காலணிகள் முக்கிய இடம்
வகிக்கின்றன.
இவ்வாறு, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், காலணிகளை வாங்க அதிகம் செலவு செய்வதாகவும், எனினும், தாங்கள் வைத்துள்ள
காலணிகளில், நான்கில், மூன்று ஜோடி காலணிகளை அணிவதில்லை எனவும், பிரிட்டன்
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment