விமானி இல்லாமல் பறக்கும் மிகச்சிறிய தானியங்கி விமானம்
நெதர்லாந்தை சேர்ந்த விண்வெளி என்ஜினீயர் பர்ட் ரெமிஸ் தலைமையிலான குழுவினர் மிகச்சிறிய தானியங்கி விமானத்தை வடிவமைத்துள்ளனர். இது 30 கிராம் வரை எடையுள்ளவை.
இந்த விமானம் விண்ணில் சிறிய பூச்சி போன்று பறக்கும். விமானி இன்றி தானாக இயங்கும். அதற்கு தகுந்தாற்போன்று கம்ப்யூட்டர் பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளது. பறக்கும்போது அந்த விமானத்தின் கட்டுப்பாடு தரை தளத்தில் இயங்கும் டிரான்ஸ் மீட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த விமானங்கள் கேமராக்கள் மற்றும் நுண்ணோக்கி திறன் கருவிகளை சுமந்தபடி விண்ணில் நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்டது. இது தீயணைப்பு படை வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை பறக்கும் ரோபோ என்று கூட சொல்லலாம். இவற்றை பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தலாம். எடை மிகவும் குறைவாக இருப்பதால் அதை செல்போன் மற்றும் லேப்டாப் போன்று எளிதில் தூக்கி செல்ல முடியும்.
இந்த தானியங்கி விமானம் மூலம் பயிர்களின் வளர்ச்சியை விவசாயிகள் கண்காணிக்க முடியும்.
Post a Comment