நவநீதம் பிள்ளையை சந்திக்க முஸ்லிம்கள் மறுத்தனரா..?
(முறாசில்)
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன் கிழமை விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மூதூர் பிரதேசத்திற்கும் வருகை தந்திருந்தார்.
இன்று மாலை 3.00 மணியளவில் மூதூருக்கு வருகை தந்த அவர் கிளிவெட்டி இடைத்தங்கல் முகாம் நாவலடி மீள் குடியேற்ற கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று மக்களின் நிலைமையை நேரில் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது பேசிய நவநீதம் பிள்ளை இன்னும் ஓரிரு தினங்களில் அரசாங்க உயர் மட்டத்தினரை சந்திக்கவுள்ளதாகவும் அதன் போது மக்களது கோரிக்கைகள் சம்பந்தமாக எடுத்துக்கூறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் முக்கியஸ்தர்கள் சிலர் ஆணையாளரை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த போதும் அவர்கள் எவரும் ஆணையாளரை சந்திப்பதற்கோ மனுக்களை சமர்ப்பிப்பதற்கோ முன்வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment