Header Ads



கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் - சதிகார கும்பலின் திட்டமிடப்பட்ட செயற்பாடு

(தினகரன்) கொழும்பு, கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியில் அமைந்துள்ள ‘மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம்’ பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு சர்வமதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பாரிய இனக் குரோதம் நிலவுவதாக சர்வதேசத்திற்கு காட்சிப்படுத்த முயற்சிக்கும் சதிகார கும்பலின் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளின் பிரதிபலிப்பே கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் என்பதனால் இவ்வாறான செய்கைகளுக்கு துணைபோக வேண்டாமென தேசிய ஐக்கியத்துக்கான சர்வமதங்கள் கூட்டமைப்பு நாட்டு மக்களை கேட்டுக்கொண் டுள்ளது.

பொதுநலவாய உச்சி மாநாட்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கை வருவதனை பொறுத்துக்கொள்ளாத தேசத்துரோகிகள் இனங் களிடையே ஐக்கியமின்மையை தோற்றுவித்து அவர்களது வருகையை நிறுத்து வதற்கு முயற்சிக்கின்றனர்.

இம்மாதம் இலங்கையின் மனித உரிமைகளை பார்வையிடுவதற்காக வரவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளைக்கு நாட்டில் இனங்களி டையே சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் இல்லை என்பதனை காட்டும் முகமாகவே அரசியல் பொறாமை பிடித் தவர்களால் திட்டமிட்டு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எத்தகைய பிரச்சினை தொடர்பில் எத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவிருப்பதனால் பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களுக்கு வன்முறைகளை தோற்றுவிக்க வேண்டியதன் அவசியமில்லை எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

நான்கின மக்கள் வாழும் இந்த இலங்கை தேசத்தில் இனப்பகைமை என்ற ஒன்று இல்லவே இல்லை. யதார்த்தமாக இடம்பெறக்கூடிய சிறு சிறு சம்பவங்களை பூதாகரமாக்கி நாட்டை பிளவுபடுத்த தீயசக்திகள் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக் கின்றன. மக்கள் இவர்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் தேவையற்ற அசம்பாவிதங்கள் நாட்டில் இடம்பெறுவதனை தவிர்த்து அமைதியும் சமாதானமும் தொடர வழியமைக்க முன்வரவேண்டுமெனவும் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மதங்கள் கூட்டமைப்பு நேற்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியது. இதன்போதே கூட்டமைப்பின் தலைவர்கள் மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்தனர்.

கூட்டமைப்பின் இணைத் தலைவர் அல்ஹாஜ் அஸ்சேய்க் கலாநிதி ஹசன் மெளலானா செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரி விக்கையில்; இலங்கையுடன் முஸ்லிம் நாடுகள் கொண்டிருக்கும் உறவினை பொறுத்துக்கொள்ளாத சில தீய சக்திகள் பெளத்தர்களுக்கும் இஸ்லாமியர் களுக்குமிடையிலான இடைவெளியை அதிகரிக்கு முகமாகவே இதுபோன்ற அநாகரிகமான செயற்பாடுகளை முன்னெ டுப்பதாக சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்; முப்பது வருட காலமாக நாட்டை பயங்கரவாதம் ஆட்டுவித்தபோது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். அவர்களுக்கு வேண்டிய தெல்லாம் சமாதானம் மாத்திரமே. என்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றி பேசத் தொடங்கினார்களோ அதன்பின்னரே நாட்டில் இன மோதல்கள் சிறிது சிறிதாக தலைதூக்க ஆரம்பித்தன.

இலங்கைக்கெதிராக ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை கொண்டுவரப் பட்ட போது அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இலங்கைக்கு வாக்களித்தன. அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமலே இனங்களுக்கிடையே குழப்பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதனைப் புரிந்துகொள்வதன் மூலம் நாட்டில் சீர்குலைவுகள் ஏற்படுத்த முயற்சிப்போரி டமிருந்து விலகி நடப்போமெனவும் அவர் குறிப்பிட்டார்.

11 comments:

  1. சிலவேளை உங்கள் கற்பனை உண்மையாக இருக்கலாம். அப்போ எதுக்கு பள்ளி வாசல்களை, பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல் மூடுவதையே தீர்வாக கொள்கின்றீர்கள்?...........

    ReplyDelete
  2. மிஸ்டர் ஹசன்! காதில பூ சுத்துவது என்பது இதுதானோ? தொழில் பாதுகாப்பா? அல்லா‍ஹ இருக்கிறான்!

    ReplyDelete
  3. You are proving to be a faithful representative of Rajapaksa not the Muslim community. Allah knows what is in our hearts.

    ReplyDelete
  4. அரசியல் சாக்கடைகளே நடந்ததற்கான முடிவை எடுங்கள் புலிகளை அழித்த நீங்களா இப்படிப்பேசுவது ஆமாஇப்படி ஜடியாக்கள் எப்படியா எப்படியே நினைத்ததை முடித்துக்கொண்டு வாரயல் இறைவா.

    ReplyDelete
  5. குழப்பவாதிகள் பொலிஸ்பாதுகாப்புடன் வந்துதான் பள்ளிவாயில்களை உடைத்தார்களா? உங்கள் தலைக்குள் என்ன் வைக்கோலா? மக்களை ஏமாற்ற நினைக்கவேண்டாம் நீங்கள் கிணற்றுத்தவளைகளாக இருப்பதுவும் அரசாங்கத்துக்கு விளக்குப்பிடிக்கவும்தான் லாயக்கு இனி யாருடைய உதவியும் முஸ்லிம்களுக்குத்தேவையில்ல எனும் நிலைமைக்கு வரும் நாள் மிகவும் தொலைவில் இல்லை அதேபோல் முஸ்லிம்கள் பொங்கி எழும்னாளில் உங்களைப்போன்ற பல்கோடி அட்டைக்கத்திகளுக்கு முடிகட்டுவது எமக்கு பெரும் காரியமில்லை இன்னும் நாம் பொறுமையுடந்தான் இருக்கின்றோம்.

    ReplyDelete
  6. நல்லாத்தான் நாடகம் நடத்துறீங்க? அப்படியானால் சம்பத்தப்பட்டவர்களைக் கைது செய்யாமல் இருப்பது ஏன்? பேச்சுவார்த்தைகளின் போது தாக்குதல் நடத்துபவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்வது ஏன்? பொலிசார் கைகட்டிக் கொண்டு எதிராளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது ஏன்? எல்லாம் அரச துரோகிகளின் வேலைதானோ? உங்களைப் போன்ற சமூகத் துரோகிகள் இருக்கும் வரை அரசாங்கத்தின் முஸ்லிம்களுக் கெதிரான வேட்டை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    ReplyDelete
  7. Mr. Mowlana! Your prediction may be correct but what is the solution that you are placed for this racism? Is it accepting demand of racist monks and closed the mosques one by one? Or find the perfect solution to live all community together respectfully with peace and harmony? But the public are well aware and not ready to believe you and people like you because such people like you are always working in favour of money, fame and influence of politicians not for community and fear of Allah.

    ReplyDelete
  8. அல்ஹாஜ் அஸ்சேய்க் கலாநிதி ஹசன் மெளலானா அவர்களுக்கு அல்லாஹ் இறையச்சத்தையும் நேரான வழியையும் காட்டுவானாக....
    அஸ்சேய்க் ஹசன் மெளலானா அவர்கள் கூறுவது போல் இது ஒரு தேசவிரோத சக்திகளின் திட்டமிட்ட சதி என்றால்,

    1. அரசு ஏன் இன்னும் அந்த தேசவிரோதிகளை கைது செய்யவில்லை, அத்தனை தேசவிரோதிகளும் போலீசாரின் முன்னிலையிலே இருந்தும், போதுமான CCTV ஒளிப்பதிவுகள் இருந்தும்.

    2. புத்த சாசன அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் ஏன் பள்ளிவாசலை மூடுவதற்கு நிர்பந்திக்க வேண்டும்?

    இவ்வாறு பல சந்தேகங்கள் முஸ்லிம் மக்களின் மனதிலே...

    அஸ்சேய்க் ஹசன் மெளலானா போன்றவர்கள் இவ்வாறு இந்த அரசுக்கு வழங்கும் உற்சாகம் இன்னும் பல பள்ளிவாசல்களை முஸ்லிம்கள் இழக்க நேரிடும் என்பதில் எந்த சந்தகமும் இல்லை.

    மார்க்க தலைவர்கள் என்ற போர்வையில், அல்லாஹ்வின் மார்கத்துக்கு துரோகம் செய்கிறார்கள் இவ்வுலக சுகபோக வாழ்கைக்காக.

    ReplyDelete
  9. சும்மா கதை விடாமல் இனங்களுக்கிடையே குளப்பத்தையும் குரொதத்தயும் உன்டுபன்னும் பொதுபல சேனா, சிங்கள ராவய பொன்ற இயக்கங்களை இல்லாதொலிப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும். இவர்கள்தான் தேசத்துரோகிகள்.

    ReplyDelete
  10. ஹசன் மௌலானா போன்றவர்கள் அரசின் சதிகளை விளங்கிக்கொள்ள இன்னும் முடியவில்லையா?

    ReplyDelete
  11. ஏனடா உங்கள்ட டயத்த வேஸ்ட் பண்றீங்க கையாளாகாத கதையெல்லாம் பேசி எங்கள ஏமாத்துறீங்க. இந்த அரசாங்கத்திற்கு தெரியாம என்ன நடக்கும் இவ்வளவோ புடுங்கின இவன்கள் இந்த அரச துரோகிகளையும் சதிகார கும்பல்களையும் அடையாளங்காண முடியாம இருப்பதும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் முடியாம இருப்பதும் என்ன வேடிக்கை அதற்கு வக்காலத்து வாங்க உங்களுக்கு ஒரு சர்வமத கூட்டம் போங்கடா கடுப்பேத்தாம.

    ReplyDelete

Powered by Blogger.