புதிய காதி நீதிபதிக்கு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் கௌரவம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் புதிய காதி நீதிபதியாக கடமையேற்றுள்ள மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஆகிய ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி)யை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் அதன் காரியாலய மேல்மாடியில் நேற்று சனிக்கிழமை இரவு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷேய்க் எம்.சி.எம்.றிஸ்வான் (மதனி) தலைமையில் இடம்பெற்றது.
இங்கு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி)யினால் விஷேட உரை ஒன்று நிகழ்த்தப்பட்டதோடு விஷேட அதிதிகளின் உரைகள் வரிசையில் காத்தான்குடி சம்மேளனம் சார்பாக ஐ.எம்.சுபைர் ஜேபியும் ,சட்டத்தரணிகள் சார்பாக சட்டத்தரணி ஏ.உவைஸ் எல்.எல்.பி.யும் விஷேட உரை நிகழ்த்தினார்கள்.
இவ் வைபவத்தில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் எம்.எச்.ஜிப்ரி மதனி ,அதன் பொருளாளர் ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி),காத்தான்குடி காதி நீதிபதியின் செயலாளர் முபாறக் மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள், ,சட்டத்தரணிகள்,காத்தான்குடி சம்மேளன உறுப்பினர்கள்,ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பிரதிநிதிகள் புத்திஜீவிகள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
காத்தான்குடி வரலாற்றில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஆலிம் காதி நீதிபதியாக நியமனம் பெற்றுள்ளது இதுவே முதற்தடவையாகும்.
Post a Comment