யா அல்லாஹ் இஸ்லாத்தின் தெளிவை அரியநேத்திரன் எம்.பிக்கு கொடுப்பாயாக..!
(அபூ அஸ்ஜத்)
அண்மையில் பாராளுமனறத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆற்றிய உரை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரிநேந்திரன்,மற்றும் விநோ நோகதாரலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள், ஹூனைஸ் பாருக் மீது தெரிவித்துள்ள கண்டனம் என்பவைகள் குறித்து ஜப்னா முஸ்லிம் செய்தி வெளியிட்டிருந்தது.
அன்று பாராளுமன்றத்தில் ஹூனைஸ் பாருக் ஆற்றிய உரை தொடர்பில் முதலில் சில விளக்கத்தை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெளிவாக கூறிய விடயம் தான்,பௌத்த இனவாத பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களின் மதத்தளங்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல் மற்றும் அசிங்கப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இறைவனின் சாபம் உண்டாவதாக என்று கூறி,அதே போன்று அன்று புலிகள் முஸ்லிம்களின் மதத் தலங்களை வடக்கில் அழித்தார்கள்,அதற்கு இறைவன் வழங்கிய தண்டனை தான் அவர்கள் அழிந்து போனார்கள் என்று கூறி,இஸ்லாத்திற்கும்,முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் அநியாயக்காரர்களுக்கு இறைவனின் சாபம்(கோபம்)உண்டாவதாக என்று பிரார்த்தித்துள்ளார்.
இந்த உரையினை அவர் ஆற்றி சில தினங்களுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.அவரும் ஹூனைஸ் பாருக் எம்.பிக்கு எதிரான விமர்சனத்தை செய்திருந்தார.பாராளுமன்றத்தில் உரையாற்றி இரு வாரங்கள் கழிந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரிய நேந்தரன் சற்று அப்பால் சென்று முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அழிப்பதற்கு பொதுபல சேனாவை உருவாக்கியது அல்லாஹ்வா? என்ற ஒரு கேள்வியினை எழுப்பியுள்ளார். இந்த கேள்வியானது அவரது பார்வையில் சரியாக இருக்கலாம்.ஆனால் அவருக்கு இஸ்லாம் பற்றிய அறிவை சொல்லி கொடுக்க வேண்டியது முஸ்லிம்களுக்கு கடமையாகின்றது.
ஒவ்வொருவரும் தாம் பின்பற்றும் கோட்பாடுகள்,மதக் கொள்கைகள் என்பன அவர்களது மதத்துக்கு ஒப்பாகும்.அதுவே சரியென்றும் வாதிடுவதை பாரக்கின்றோம்.ஆனால் இஸ்லாமியர்களை பொறுத்த வரையில் அவர்கள் எந்த சந்தரப்பத்திலும் முஸ்லிமாக இறைவன் ஒருவனையே விசுவாசம் கொண்டவனாக,அனைத்து காரியங்களும் அவனின் விதிப்படியே நடக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டவனாகவே இருக்கின்றான்.ஆக்குவதும்,அழிப்பதும் கடவுளின் செயல் என பொதுவானதொரு எடுகோளை எல்லோரும் பேசுவதுண்டு,ஒருவனுக்கு ஒரு இடயூறு ஏற்பட்டுவிட்டாலோ,அல்லது நலது நடந்து விட்டாலோ கடவுள் சித்தம் என்று வேற்று மதத்தவர்கள் கூறுவதை கேள்வியுற்றுள்ளேன்.அதே போல் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் எல்லாம் இடம் பெறுகின்றது என்ற உயர்ந்த விசுவாசத்தை கொண்டுள்ளதையும் அரியநேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
இந்த நாட்டில் 3 தசாப்தம் நடை பெற்றது,பயங்கரவாதிகளின் ஆட்சி என்பதற்கு போதுமான சான்றிதழ்கள் உண்டு,கிழக்கில் தாங்கள் பிரதி நிதித்துவப்படுத்தும்,காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் வணக்கத்தில் இருந்த முஸ்லிம்களை பின்புறமாக சென்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தீர்களே இது தான் மனித நேயமா?சதாம் ஹூசைன் கிராமத்துக்குள் புகுந்து கர்பிணி தாயின் வயிற்றில் இருந்த சிசுவை வயிற்றை கிழித்து வதைக்க வதைக்க செய்த கொடுமைகள்,மறக்கக் கூடியதா?இதை செய்தவர்கள் தமிழ் மக்களா?இல்லவே இல்லையே பாசிச புலிகளின் மண்ணாசை வெறி,இந்த வெறியின் பின்னால் இருந்தவர்கள் உங்களைப் போன்றவர்கள் என்பதை மறந்துவிட்டு ஹூனைஸ் எம்.பியின் வாக்குக்கு கண்டனம் தெரிவிக்கின்றீர்களே,எந்தவொரு உயிரையும் பறிக்கும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை என்பதை நீங்கள் எற்றுக் கொள்ளமாட்டீர்கள்,ஏனெனில் கடந்த 30 வருடம் நீங்கள் பறித்த உயிர்களின் பட்டியல்களை எம்மால் சமர்பிக்க முடியும்.
இரண்டாவது, அன்று பாராளுமன்றத்தில் ஹூனைஸ் எம்.பி உரையாற்றியதை குறிப்பாக சில தமிழ் ஊடகங்கள் முதற்பக்கத்தில் பிரசுரித்திருந்தன.பாராளுமன்ற உறுப்பினராக அவர் வந்து 3 வருடங்கள் கழிந்த நிலையில் அவரது எத்தனை உரைகளை முதற்பக்க செய்தியாக இந்த ஊடகங்கள் வெளியிட்டிருந்தன என்பதை கேட்க வேண்டும்.இருப்பினும் ஆளும் கட்சி வரிசையில் நின்று ஹூனைஸ் எம்.பி.உரையாற்றிக் கொண்டிருந்த போது,எதிர் கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்து அவரது பேச்சை அங்கீகரித்த உங்களை பாராளுமன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,தேர்தல் என்ற ஒன்று வந்ததால் இந்த உரைக்கு பிழையான அர்தத்தை கற்பித்து,ஒற்றுமையாக வாழும்,தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த வகுக்கும் வியூகம் என்பதை மக்கள் நன்கறிந்து கொள்வார்கள்.தேவையான போது தமது சமூகத்திற்காக பேசாத உங்களைப் போன்ற அரசியல் வாதிகளால் மக்கள் எதிர் கொள்ளும் இடைஞ்சல்கள் தான் ஏராளம்.
முஸ்லிம்களை பொறுத்த வரையில் சட வாதத்தினை ஒரு போதும் தமது தலைமைகளாக ஏற்றுக் கொண்டதில்லை.முஸ்லிம் என்றால் அவன் அல்லாவுக்கு கட்டுப்பட்டவன்,இறைவனின் திருப்தியையே நாடி செயற்படுபவன்,அவன் வேறு கடவுள்களை வணங்குவதுமில்லை,ஏற்றுக் கொள்வதுமில்லை.இவ்வாறு இருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் முஸ்லிம் எம்பிக்கள் அல்லாஹ்வின் பெயரை சொல்லி அரசியல் செய்யக் கூடாது என்று கூறுவது அவருக்கு பொருத்தமானதாக இருந்தாலும்,முஸ்லிம்களை பொறுத்த வரையில் அது முற்றாக நிராகரிக்கப்படுகின்ற ஒரு கருத்தாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் இறைதுாதர்கள் இஸ்லாமிய பிரசாரங்களை செய்த போது,இறைவன் பல்வேறு சோதனைகளை ஏற்படுத்தினான்.அது அவர்கள் இறைவனின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை உறுதி செய்யும் ஒன்றாகவே அமைந்தது.பல சந்தரப்பங்களின் இஸ்லாத்தின் எதிரிகள் மேற்கொண்ட சொல்ல முடியாத துன்பங்களிலும்,அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் இலாஹ்(கடவுளாக )ஏற்றுக் கொள்ள மறுத்த சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றில் உள்ளது.இதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வாசித்து தெரிந்து கொள்ள முயற்சிப்பார் எனில்,பொதுபலசேனாவை உருவாக்கியது அல்லாஹ்வா,பள்ளிவால்களை தாக்க சொன்னது,பா்தாவை அகற்றச் சொன்னது அல்லாஹ்வா?என்ற குதர்க்கமான கேள்விகளை கேட்டிருக்க மாட்டார் என்பத எனது அவதானமாகும்.
எது எவ்வாறாக இருந்தாலும்,வடக்கில் தேர்தல் ஒன்று இடம் பெறப் போகின்றது.தமிழ் மக்களினை முஸ்லிம்களுக்கு எதிராக சீண்டச் செய்வதன் மூலம்,வாக்குகளை அதிகரித்துக் கொள்ளலாம் என்று யாரோ சொன்ன கதைக்கு இரண்டுவாரங்கள் கழிந்த நிலையில் அரியநேத்திரன் எம்.பியின் அறிக்கை வெளியாகியிருப்பதன் பின்னணி தெளிவாக உள்ளது.யா அல்லாஹ் இஸ்லாத்தின் தெளிவை அரியநேத்திரன் எம்.பிக்கு கொடுத்து முஸ்லிம்கள் மீது இறக்கம் கொள்ளும் மனதை எற்படுத்திவிடு..இது எமது பிரார்த்தனையாகும்
ஆமின்
ReplyDeleteதம்பி அஷ்ஜத், புலிகள் செய்த தவறுகள் ஏராளம் அதே நேரம் புலிகள் தமிழர்களின் உரிமை போராட்டத்தில் மாபெரும் தாக்கத்தையும் பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்றவர்கள் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ReplyDeleteஇப்படி தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற ஒரு இயக்கத்தின் அழிவிற்கு அல்லாஹு தான் காரணம் என தமிழர்களின் மனதை புண்படும் படியாக கூருவது ( எந்த வித தேவையும் அற்ற சந்தர்பத்தில்) அல்லது குத்திக் காட்டுவது ஒரு நாகரிகமான செயலாக கருத முடியாது.
தங்களது சுயநல அரசியலுக்காக இனக்களிடையே போட்டியையும் பொறாமையையும் மனகசப்பான விடயங்களை பேசுவதும் துவேசத்தை வளர்ப்பதுவும் மிகவும் கண்டிக்கப் பட வேண்டிய விடயமாகும்.
சகோதரர் ஹுனைஸ் பாருக் முஸ்லிம்களின் மிகவும் முக்கியமான விடயம் ஒன்றை பாராளுமன்றத்தில் பேசும் போதே இந்த வார்தைபிறேயோகம் இடம் பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்துடன் ஹுனைஷ் பாரூக் கூறாவிட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பது நாகரிகமான செயல் என்றே எனது பணிவான கருத்தாகும்.
அல்லாஹுஅக்பர்
ReplyDeleteகுருவி அண்ணா...
ReplyDeleteபுலிகள் செய்த தவறுகள் ஏராளம் என நீங்களே சொல்லி புலிகள் தமிழர்களின் ஆதரவை பெற்றவங்க என்பதால் அவர்கள் செய்தது பற்றி கதைப்பது தமிழர்களின் மனதை புண்படுத்தும் என்று கூறுகின்றீர்கள்..ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை. நடந்த பிழைகளை சுட்டிகாட்டுவது துவேசம் வளர்பதற்கு அல்ல.,, மாறாக அதே தவறு மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கே! புரிந்துணர்வு நாம் எல்லோருக்கும் தேவை..அல்லாஹ் அதனை வழங்குவானாக!
எதார்த்தம் ஒன்று இருக்க இங்கு பேசப்படுவது ஒன்று.புலிகள் அழிந்து விட்டார்கள் என்று கூறுவதை இவர்களால் ஏற்க முடியாது உள்ளது.அதை ஒரு தாழ்வாக நினைக்கிறார்கள். இது உளவியல் ரீதியான ஒரு பிரச்சினை. இதற்கு இரு இனங்களை இழுத்து தாங்கள் அரசியல் விளையாட்டு விளையாடுவது நல்லதல்ல. தாழ்வாகவும் கேவலமாகவும் நினைத்துக்கொண்டு செயல்பட்டால் விமோசனம் பெற முடியாது. ஒன்றை அடைவதற்கு இன்னொன்றை இழந்தே தீரவேண்டும்.
ReplyDeleteசகோதரரே...................
ReplyDeleteஒரு பெரும்பானமை பௌத்த சமூகத்தின் கீழ் உங்களுக்கு வாழ முடியாது என்று உாிமை மறுக்கப்படுகிறது என்றதற்காக ஏன் முஸ்லீம்களின் மீது இவளவு காட்டு மிராண்டித்தனமாக விடுதலைப்புலிகள் நடந்து கொண்டார்கள்
அதே நேரம் பெரும்பான்மை பௌத்தரோடு வாழ முடியாது என்று சொன்னாலும் அவா்களோடுதான் வாழ்கிறோம் என்பதை மறுக்க முடியாது
ஆனால் 1990 ஆம் ஆண்டு இத்தமிழ் சமூகத்தின் சிறுபான்மையாக இருந்தவா்களை கதறக் கதற விரட்டி விட்டார்கள். இதன் போது நீங்கள் யோசிக்க வேண்டும் அவா்கள் என்ன தவறு செய்தார்கள் என்று அதன்படி இச்சிங்கள பேரின வாதிகளை விட விடுதலைப்புலிகள் மிகவும் மோசமானவா்கள் என்றுதான் நாங்கள் கருத்துக் கொள்ள வேண்டும். அந்த அர்த்த்தில் இவ்வாறானதொரு கருத்து சொல்லப்பட்டிருந்தால் அது சரியானதே ஒரு காட்டு மிரானடடிக் கூட்டத்திற்கு ஒரு குழு ஆதரவு வழங்குவதால் அது சரியானதாக ஆக முடியாது.
அதே நேரம் பௌத்தா்களின் அதே இடத்தில் விடுதலைப்புலிசார்ந்தோர் இருந்திருந்தால் இந்த நாட்டில் 100 வீதம் அவா்களாகத்தான் இருப்பார்கள் காரணம் ஏனைய முஸ்லிம் சிங்களவா்களை கடலுக்குள் தள்ளியே அழித்திருப்பார்கள்
எங்களுக்கு 1990 ஆம் ஆண்டு அச்சிங்களவா்களும். எம்சகோதர முஸ்லீம்களும் இடம் கொடுத்ததால் நாம் உயிா் வாழ்கிறோம். நம் பரம்பரை உயிா் வாழ்கிறது.
எல்லோருமே தாங்கள் செய்யும் தவறுகளை என்றுமே ஏற்று கொள்ளுவது இல்லை.அப்படித்தான் இஸ்லாமிய சகோதரர்களும் புலிகள் செய்தார்கள் புலிகள் செய்தார்கள் என்று சொல்லும் முன்னே நீங்கள் செய்தவை என்ன என்பதை சற்று திரும்பி பார்க்க வேண்டும் ..யாழ் மண்ணில் இருந்து ஆரம்பித்து சத்திரகொண்டான் ,கொக்கட்டி சோலை ,வந்தாரா முலை ,இப்படி பலவற்றை அடுக்கி கொண்டு போகலாம் ..ஆனால் நாம் அதை மீண்டும் நினைவுபடுத்தி எமது சமூகத்துக்குள் வேற்றுமையை உருவாக்க முனையவில்லை ..ஆனால் இஸ்லாமி சகோதரர்கள் அப்படி எண்ணவில்லை தங்களுக்கு மட்டுமே வலி மற்றவர்களுக்கு இல்லை என்பது போலவே வாதிடுவார்கள் ..முதலில் நீங்கள் யார் ?தமிழனா ,இஸ்லாமியனா? இதற்க்கு உங்களின் காத்திரமான பதில்தான் என்ன??விடை சொல்ல முடியுமா?? ஆசும் அய்யா அவர்களே அன்று உங்களை விரட்டியது ஒரு வரலாற்றில் கரும்புள்ளி அதை மறுக்க முடியாது மறுப்பவன் மனிதனும் இல்லை ..ஆமாம் சும்மா இருந்த உங்களை ஏன் போக சொன்னார்கள் ?? இதற்க்கு மட்டும் நீங்கள் விடை சொல்ல முடியுமா? அல்லாவின் ஆணையில் தவறுக்கு தண்டனை உண்டு என்கிறீர்கள் நீங்கள் செய்வது நியாயமா? உங்களிடமும் மீண்டும் ஒரு கேள்வி நீங்கள் தமிழனா ,இஸ்லாமியனா?? பேசுவதுக்கு முன்னர் எண்கள் தவறுகளையும் திருத்தி கொள்ள முயற்ச்சி செய்ய வேண்டும் சகோதரர்களே ..சரி புலிகள் உங்களை விரட்டினார்கள் இப்போ அவர்கள் இல்லை தானே ? இன்றும் ஏன் உங்களுக்கு பிரிவினை ? யாழ் செய்தி ஆசிரியரே வடக்கில் இஸ்லாம் தளங்கள் மட்டும் இல்லை ஹிந்து ,கிறிஸ்தவம் ,எல்லாம் தளங்களுமே அழிக்கபட்டன ..இது நீங்கள் உணர்ந்து கொள்ள போவதில்லை.//ஆசும் நீங்கள் மேலே குறிப்பிட்ட கருத்துக்கு இன்னும் சில காலங்களில் சிங்கள மக்கள் பதில் சொல்லுவார்கள் ..
ReplyDeleteஅந்த நேரத்தில் காட்டிகொடுத்தல், சிறு ஆயுத குழுக்களோடு சேர்ந்து தமிழர்கள் கொல்லப்படுவதற்கு துணை புரிந்தமை, என்பன முஸ்லிம்களாலும் அரங்கேறியது. இதுவும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதுக்கு காரணம். புலிகள் இருக்கும் போது வாய் திறக்காத முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது வாய் சவடால் விட்டு அரசியல் நடத்துகிறார்கள்.. இவர்கள் கோழைகள், முஸ்லிம் தமிழ் உறவை நாசமாக்குபவர்கள்.
ReplyDeleteசகோதரர்களே!!!, எங்களுக்குள் ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும், அப்படி இருக்கும் ஒற்றுமையை இலகுவாக அளிப்பதற்கான ஒரே வழி மதத்தை அல்லது இறைவனைக் குறைகூறுவது, இங்கு வாதிடும் எவரும் ஏனைய மதங்களைக் குறை கூறவில்லை. அரியநேத்திரன் செய்த தவறு அதுவே. மாறாக ஒரு முஸ்லிம் இந்துக்களின் கடவுள்களை கேலி செய்யுமாறு தகவல்கள் கூறியிருந்தால் தமிழ் சகோதரர்களின் மனது புண்பட்டிருக்கும், எனவே தயவு செய்து மறப்போம் மன்னிப்போம், எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம். (எமது இரு சமூகத்தை விடவும் துவேஷம் குறைந்தவர்கள் பெரும்பான்மையினரே, இதனையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்)
ReplyDeleteதமிழ் சகோதரா்கள் என்னை மன்னிக்க வேண்டும்
ReplyDeleteதவறாக கூறியிருப்பின்
அன்றைய காலத்தில் வடக்கில் இருந்து நான் வெளிறே்றப்படும் போது நான்பட்ட இன்னல் என் சகோதரனின் இறந்த உடலை இலை குலையால் மூடிவிட்டுப் போன துன்பம் இவ்வாறு எல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு காரணமான விடுதலைப்புலிகளையும் அதற்கு ஆதரவு வழங்கிய கூட்டத்தாரையும் தான் நான் குறிப்பிடுகிறேன். சகோதரா் சுரேஷ் நீங்கள் தவறாக விளங்க வேண்டாம். இருந்த போதும் அதன்பின் வெளியான சாரி நிகா் அல்லது ஏதோ ஒரு பத்திாிகையில் முஸ்லிம்களை வடமாகாணத்திலிருந்து வெளியேற்றியது தவறு என்ற பணியிலே தலைவா் கதைத்திருக்கிறர இருந்தபோதும் நான் 2003 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் நான் எனது குடும்பத்துடன் ஊா் வந்தபோது எவ்வாரெல்லாம் நெருக்குதல் தந்தார்கள் என்று எனக்கும் என் சார்ந்த குழுவுக்கும் தான் தொியும் அந்த நேரம் நான் இவா்களுக்கு அழிவு ஏற்பட வேண்டுமென்றுதான் பிரார்த்தித்தேன் ஆனால் என் தந்தையின் நன்பா்கள், என் சகோதராின் நண்பாகளை கண்டு நீண்ட நாளின் பின் சந்தோசமாயிருந்தோம் அவா்கள் இவா்களின் அடக்கு முறைக்கு எதிராகத்தான் பேசினார்கள் பெரும்பாலானவா்கள் அவா்களின் நடவடிக்கைகளை நன்றாக சொல்லவில்லை எனவே தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன் நான் இப்போது மீளக்குடியேறியுள்ள சூழலில் ஆயுத முனையில் எவ்வாறு ஒடுக்கப் பட்டோமோ அதே போல் சில பிராந்திய பத்திரிகைகளாலும், உயா்மட்ட அரசாங்க உத்தியோகத்தா்களாலும் மீண்டும் பல விடயங்களில் ஒடுக்கப்படுகிறோம் ஒரு சில அரசியல் வாதிகளின் பெயரை வைத்துக் கொண்டு முழு சமூகத்தையுமே ஒடுக்கியாழ நினைக்கின்றார்கள் மேற் சொன்ன நிலையில் உள்ள பெரும்பான்மையினா்.