Header Ads



பௌத்த தேரர் உண்ணாவிரதம் - வெலிவேரிய பகுதியில் மீண்டும் பதற்றம்

வெலிவேரிய, ரத்துபஸ்வலவிற்கு விசேட அதிரடிப்படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் 152 பேரே  அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடைமையிலிருக்கும் பொலிஸாருக்கு மேலதிகமாகவே விசேட அதிரடிப்படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ரத்துபஸ்வலவிலுள்ள நிறுவனமொன்று தனது பணிகளை ஆரம்பித்ததையடுத்து மக்கள் இன்று மாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குறித்த நிறுவனத்தையும் சுற்றிவளைத்தனர் இதனையடுத்தே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிவேரிய ரத்துபஸ்வல கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து சித்தம்ம தேரர், பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் இன்று சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரதேசத்தில் அந்த சர்ச்சைக்குரிய தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்குவதை எதிர்த்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலை இயங்குவது சட்டவிரோதமானது என குற்றம்சுமத்தியுள்ள சித்தம்ம தேரர், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மீறி இந்த தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

சுத்தமான குடிநீர் கேட்டு மக்கள் நடத்திய  போராட்டத்தினையடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால், குறித்த தொழிற்சாலை அங்கிருந்து அகற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய தொழிற்சாலை தற்போதுள்ள இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும் வரை தமது போராட்டத்தை தொடர போவதாக தேரர் கூறிள்ளார்.

கடந்த முதலாம் திகதி கொழும் கண்டி வீதியை மறிந்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

No comments

Powered by Blogger.