Header Ads



முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் விளக்கம்..!

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)   

முஸ்லிம் கலாசார திணைக்களம் வழங்கிய பேரீச்சம் பழத்தில் சிக்கல் எனும் தலைப்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி வெளியான செய்திக்கான விளக்கத்திணை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் தருகின்றார்.

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் உள்ள மக்களுக்கு அறபு நாடுகள் நோன்பு காலத்தில் பேரீத்தம் பழங்களை இளவசமாக வழங்குவது வழமை. அந்தவகையில் சவுதி அரேபியா, ஐக்கிய அறபு இராட்சியம், குவைத், ஈரான் போன்ற நாடுகளே நோன்பாளிகளின் நலனுக்காக பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு வழங்கி வருகின்றன. இவற்றில் வருடா வருடம் சவுதி அரேபியாவே சுமார் 200 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை அதிகமாக தரும் நாடாகும் ஏனைய நாடுகள் பத்து அல்லது இருபது மெற்றிக் தொன் தருவார்கள் அதுவும் சிலவேளைகளில் கிடைப்பதில்லை.

இவ்வாறு இந்நாடுகள் தரும் பேரீத்தம் பழங்களில் சவுதி அரேபியா அரசாங்கத்தால் அனுப்பப்படும் பழங்களை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் சுங்கத்திணைக்களத்தில் இருந்து மேற்படிப் பேரீத்தம் பழங்களை பல சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொள்கின்றது என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றோம். இவ்வாறு எமக்கு வரும் பழங்களை அந்நாடுகள் பள்ளிவாசல்களினூடாகவே நோன்பாளிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு வேண்டி நிற்கின்றன.

இதன் அடிப்படையில் கிடைத்த பழங்களை திணைக்களம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசாங்க புள்ளி விபரத் திணைக்களத்தின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி (முஸ்லிம் மக்களின்) அதற்கேற்றவாறு இதுவரை காலமும் பகிர்ந்தளித்து வருகின்றது.

இவ்வாறு ஒவ்வவொரு மாவட்டத்திற்கும் குறித்த தொகைப் பழங்களை அனுப்புவதற்கு திணைக்களத்தில் நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் அவற்றை அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கு நலன் விரும்பிகள் மூலம் இலவச போக்குவரத்துச் சேவையையும் பெற்றுக் கொள்வது வழமை.

இவ்வாறு திணைக்களம் பங்கீடு செய்யும்போது சிலவேளைகளில் அத்தொகைகள் போதாதிருந்தால் அவற்றை கவனத்தில் கொண்டு வேறு நலன் விரும்பிகள் கொண்டு வரும் பழங்களில் ஒரு சிறு தொகையைப் பெற்று வழங்குவதும் வழமை.

இந்நிலைமைகளில் அறபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்கள் உள்ளிட்ட சில மார்க்க நிறுவனங்களும், அரச திணைக்கள முஸ்லிம் அலுவலர்களும் தமக்கு சிறு தொகை பேரீத்தம் பழங்களை கேட்டு திணைக்களத்திற்கு கடிதம் மூலம் கோருவதையும் பள்ளிவாசல்களினூடாக மக்களுக்கு வழங்குவதில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் ஒரு சிறு தொகையை இவற்றிற்காக ஒதுக்குவதுடன் அரச திணைக்கள் ஊழியர்களின் வேண்டுகோலிற்கு இணங்க அவர்களுக்கும் அவர்களின் இப்தார் நிகழ்வுகளுக்கு பழங்களை வழங்கி வருகின்றோம்.

இவ்வாறான நிலையில் பள்ளிகளைத் தவிர ஏனையவர்களின் கோரிக்கைகள் அதிகம் கிடைப்பதால் திணைக்களம் தன்னாள் முடிந்தளவு அவர்களுக்கும் உதவி வருகின்றன.

இதேபோல் இம்முறை திணைக்களத்திற்கு கிடைத்த பழங்களை பள்ளிகளினூடாக நோன்பாளிகளுக்கு அனுப்பி முடிந்ததால் சில முக்கியமான கடிதங்களுக்குரியவர்களுக்கு வழங்குவதற்கென வேறு ஒரு நலன் விரும்பியின் பழத்தில் இருந்து ஒரு தொகைப் பழங்களை கடந்தவாரம் திணைக்களம் பெற்று அதனை எழுத்து மூலம் தந்தவர்களுக்கு வழங்கினோம்.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற பழங்கள் ஈராக் நாட்டினதுடைய ஒரு வகையான காயந்த பழங்களாகும். அத்துடன் அவை உரிய முறையில் பொதி செய்யப்பட்டு வரும் பழங்கள் நல்ல பழங்கள்தான் எனினும் கிடைத்த பழங்களை திணைக்களம் முற்றுமுழுதாக உடைத்துப் பார்க்க முடியாது அத்துடன் இலவசமாக கிடைகப்பெறுபவையை அதன் காலாவதித் திகதி குறிப்பிட்டு வரும்போது அதனை சுவைத்துப்பார்க்கவேண்டிய தேவை திணைக்களத்துக்கு அப்பாற்பட்ட விடயம். அத்துடன் சுங்கத்திணைக்களம் உணவுப் பொருட்கள் என்றவகையில் அவற்றில் கூடிய கவனம் செலுத்தி அவற்றை பரிசீலித்த பின்னரே திணைக்களம் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி தரும் என்பதனையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

இந்தவகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரின் வேண்டுகோலிற்கு அமையவே அதன் பணிப்பாளர் தானாகவே வந்து மேற்படிப் பழங்களை பெற்றுச் சென்றார். அவருக்கு வழங்கும்போது மேற்படிப்  பெட்டிகள் பொலித்தீன் உறை மூலம் சிறந்த முறையில் பொதி செய்யப்பட்டிருந்ததையும்  அவருக்குத் தெரிந்த விடயமாகும்.

ஏனெனில் இதே பழங்களை ஏனையவர்களும் பெருமனதுடன்  கொண்டு சென்றுள்ளனர் அவர்களால் அவ்வாறு குறைகளை சுட்டிக்காட்டி பகிரங்கப்படுத்தப்பட்டதையோ குறை கூறியதையோ  திணைக்களம் இதுவரை அறிந்து கொள்ளவில்லை.

எனவே மேற்படி குறைகளை கண்டவர்கள் மனிதாபிமான அடிப்படையில் திணைக்களத்திற்கு அறிவித்து விடயத்தை கூறியிருக்கலாம் மாறாக தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சதிகளுக்கு மத்தியில் இவ்வாறான செயற்பாடுகள் எமது சமுகத்திற்கு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதனை ஊடகவியலாளர்கள் மிக அவதானத்துடன் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேற்படி விடயங்களை செய்வதிலிருந்து விலகிக் கொள்ளும் நிலைமைகளும் வரலாம்.

உண்மையில் நோன்பாளிகளைத் தவிர ஏனைய நிறுவனங்களுக்கோ அல்லது திணைக்களங்களுக்கோ வழங்கவேண்டிய தேவை திணைக்களத்திற்கு இல்லை என்பதனால் எதிர்காலத்தில் இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு அவற்றிக்கேட்ப நடவடிக்கைகளை மேற்கொள் திணைக்களம் உத்தேசித்து வருகின்றது.  

7 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    தங்களது விளக்கங்களுக்கு நன்றி!
    இந்தமுறை எத்தனை மெற்றிக் தொன் பழம் எந்தநாட்டில் இருந்து வந்தது?
    இலங்கையில் உள்ள முஸ்லீம் குடும்பங்கள் எத்தனை?
    கொடையாலர்களிடம் இருந்து கிடைத்தது எத்தனை கிலோ
    போன்ற தகவல்களை உள்ளடக்கியிருந்தால் மிகவும் பிரயோசனமாகவும் ,வெளிப்படத்தன்மையானதாகவும் இருந்திருக்கும்.

    இலங்கையில் திணைக்களங்களின் செலவீனங்களை திட்டமிடாமலா வரவு செலவுத்திட்டம்
    வரையப்படுகின்றது?
    உங்களைது திணைக்களத்தின் அடுத்த ஆண்டுக்கான திட்டவரைபில் ஈத்தம்பழங்களை
    அனுப்புவதற்குரிய போதுமான நிதியை ஒதுக்க திட்டமிடுங்கள்
    நிறுவனங்களுக்கு கொடுப்பதை விட அரபுக்கல்லூரிகல்முச்லிம் அநாதை இல்லன்கல்மற்றும் முதியோர் இல்லங்களுக்கு கொடுப்பது பிரயோசனம்.

    ReplyDelete
  2. we are in akkaraipattu up to now we didn't get.if any body give any donation, you want to do
    theirs like how it was devoid by you,can you published the district vise

    ReplyDelete
  3. forget it averybody.we are facing many problems ready for face it

    ReplyDelete
  4. If the donators ate conditioning to be distributed only through mosques,it is haraam to distribute to any other parties

    ReplyDelete
  5. குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளித்து விட்டோம் என்ற திருப்தியுடன் இருந்து விடாமல் எதிர்காலத்தில் விழிப்புடன் திட்டமிட்டு செயற்படுவது நன்று.

    குறிப்பாக பள்ளிவாசல்களுக்கு பேரீது;தம்பழங்களைக் கையளிக்க முன்பாக இத்தகைய ஊடகங்கள் மூலம் இன்னின்ன மாவட்டங்களுக்கு அல்லது இன்னின்ன பள்ளிவாசல்களுக்கு இவ்வளவு கிரோ வழங்கப்பட்டுள்ளது என அறிவித்தால் பொறுப்பேற்பவர்களும், பயனாளிகளும் விழிப்படைவார்கள்.

    - புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  6. சவுதியில் இருந்து வந்த 200 மெட்றிக் தொன் ஈச்சம்பழத்தை மட்டும் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் கொடுத்து மீதமும் எடுக்கலாம் அதற்கு நிதி ஒதுக்கீட்டைவிட மன சுத்தமும் இறையச்சமும்தான் தேவை.

    வசதிபடைத்தவர்களுக்கு கொடுப்பதைவிட ஏழைகளுக்கு கொடுப்பதை மும்மூரப்படுத்துங்கள். அதிகப்படியான விளக்கம் தேவையில்ல.

    ReplyDelete

Powered by Blogger.