சவூதி அரேபியாவில் பெண்கள் அரங்கேற்றிய நாடகம்
சவுதி பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தலைநகர் ரியாத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முற்றிலும் பெண்களே தயாரித்து, இயக்கி, நடித்த மேடை நாடகம் நடத்தப்பட்டது.
இந்த புதிய முயற்சி தொடர்பாக கருத்து கூறிய ஒருவர், 'நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதைப்போன்ற பெண்கள் நாடக குழுவுக்கு நல்ல வரவேற்பும், அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால், தற்போது பண்டிகைகளின் போது மட்டும்தான் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
முற்றிலும் பெண்களே பங்கேற்கும் எங்கள் நாடகத்தின் மூலம் திருமணம், குழந்தை வளர்ப்பு மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு உதவுதல் போன்ற சமூக பிரச்சனைகளை நாங்கள் கதை வடிவில் கூறுவதால் ஏராளமான பெண்கள் எங்கள் நாடகங்களை கண்டு, ரசித்து, விழிப்புணர்வு பெறுகின்றனர்.
எங்களுக்கு போதுமான நிதியுதவி செய்யவோ, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை செய்து தரவோ யாராவது முன்வந்தால் எங்கள் கலையின் மூலம் பெண்களின் மேம்பாட்டுக்கு பாடுபட முடியும் என நம்புகிறோம்' என்றார்.
Post a Comment