Header Ads



கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் - அமெரிக்கா கவலை

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. 

மேற்படி சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம், மதஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

இவ்வாறான தாக்குதல் சம்பவங்களின் போது அனைத்து தரப்பினரம் ஒன்றுபட்டு அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கையில், முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சம்பவங்களை கிராண்பாஸ் தாக்குதல் சம்பவம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது என்றும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அதன்மூலம், மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளியிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

4 comments:

  1. சம்மந்தப்பட்டவர்கள் அரசாங்கம்தான் தவிர வேறுயார் இது உலகிற்குப்புரியவேண்டும். இலங்கையை தற்போது ஆட்சிசெய்வது காடையர்கள் குடும்பம் அதை முஸ்லிம்கள் சொன்னால்தானே மனவருத்தமும் கவலையும் ஆனால் பெளத்தர்களே தமது சமூகத்தினரது ஆட்சியைப்பற்றி காறி மூஞ்சில் துப்புவது பார்ப்பதற்கு படுகேவலமாகவுள்ளது. இதேவேளை அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு அடிவருடிகளாக இருப்பவர்களும் அடிக்கடி சொல்லும் வார்த்தை தற்போது இலங்கை அமைதியானதொரு சூழ்னிலையையும் முன்னேற்றமானதொரு பாதையிலும் சென்று கொண்டிருக்கின்றது, என்று இவர்களுக்கு நாங்கள் சொல்லவிரும்புவது என்னவென்றால், உமக்குரிய நாள் வெகுதொலைவிலில்லை அல்லாஹ்வின் தண்டனைகள் நிச்சயம் உண்டு அதுவும் இவ்வுலகில் உண்டு நாங்கள் இன்னும் பொறுமையுடந்தான் இருக்கின்றோம்.

    ReplyDelete
  2. Paawam ewwalavu akkarai muslimgal widayattil burmaawil aayirakkanakkana muslimgal sendra warudam kolai seyyappadum podu engu irundaarhal inda mudalaikkanneer ( koli weriyarhal )

    ReplyDelete
  3. Well said Mr. Renees MHM.

    ReplyDelete
  4. Tawheed Jamath % America (USA) condemn the attack on Grandpass Mosque. O Muslims think twice.

    ReplyDelete

Powered by Blogger.