ஏமன் நாட்டிலிருந்து வெளியேறும்படி தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதால், ஏமன் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறும் படி, தங்கள் நாட்டு மக்களுக்கு, அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள, 19 தூதரகங்களை, அமெரிக்கா, ஒரு வாரத்துக்கு மூடியுள்ளது. ஏமன் நாட்டில், அல் குவைதாகள் அதிகம் உள்ளனர். எனவே, அவர்கள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்பதால், உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறும் படி, தங்கள் நாட்டு குடிமக்களுக்கு, அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு தூதரகங்களும், ஏமன் நாட்டில், ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
Post a Comment