மூதூரில் கடைகள் உடைப்பை அடுத்து ஏற்பட்ட பதற்றம் தணிந்தது (படங்கள்)
(அபு அரிய்யா)
மூதூரில் பிரதான வீதியில் மூதூர் தள வைத்தியசாலைக்கு முன்னால் அமையப்பெற்ற சுமார் 13 கடைகள் 2013-08-21ஆம் திகதி இரவு இனந்தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
வழமை போல் கடைகளை திறந்து தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட இன்று காலை 7 மணியளவில் கடைகளுக்கு வந்த வர்த்தகர்கள் தங்களது கடைகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருப்பதைக் கண்டு பதற்றமடைந்தனர். இதனால் அப்பகுதியில் காலை 10 மணி வரை சுமுக நிலை பாதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டிருந்தன.
பதற்ற நிலையை தகர்த்து உடனடியாக சுமுகநிலையை ஏற்படுத்துவதற்கும், வர்த்தகர்களின் கடைத்தொகுதிகளுக்கான பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்துவதற்குமான விஷேட கலந்துரையடலை மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். ஹரீஸ் தலைமயில் மூதூர் வர்த்தக சங்கத்தினர், மூதூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள், மூதூர் பிரமுகர்கள் இணைந்து பிரதேச சபையில் ஏற்பாடு செய்தனர்.
இதில் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டு நிலைமை சுமுகமான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1. கடை உடைப்பால் பாதிக்க்பட்ட வர்த்தகர்களின் சேத விபரங்களை உடனடியாக அறிந்து சம்பவத்தில் ஈடுபட்ட காடையர்களை சட்டத்தின் முன் கொண்டு வரல். இதற்கான முழு ஒத்துழைப்புகளையும் பொலிஸ் அதிகாரிகள் வழங்குவர்.
2. தொடந்தும் எதிகாலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பாதுகாப்பதற்கு மூதூர் பொலிஸ் நிலையம் அதற்குரிய அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்வதோடு பொலிஸாருடன் இணைந்து வர்த்தக சங்கத்தினரும் தங்களது கடைத் தொகுதிகளுக்கான பாதுகாப்பு ஊழியர்களை ஈடுபடுத்தல்
3. இப்போதிருந்தே இந்த அசம்பாவித நிலையிலிருந்து மீண்டு கடைகளைத் திறந்து தங்களது வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடல்
இத்தீர்மானங்களுக்கமைவாக தற்போது மூதூரில் கடைகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கி வருகின்றது.
Post a Comment