அவுஸ்திரேலிய கனவு மட்டக்களப்பு கடற்பரப்பில் கலைந்தது (படங்கள்)
(ஏ .ஜே.எம்.சாலி +ஜவ்பர் கான்)
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த மட்டக்களப்பு , திருகோணமலை,கிளிநொச்சி,வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 115 பேர் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து புதன்கிழமை கைது செய்யப்பட்டு திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 59,பெண்கள் 26, ஆண்பிள்ளைகள் 15, பெண்பிள்ளைகள் 15 என மொத்தமாக 115 பேர் பிடிபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 42 பேரும் திருகோணமலையைச் சேர்ந்த 10 பேரும் கிளிநொச்சியைச் சேர்ந்த 28 பேரும் வவுனியாவைச் சேர்ந்த 22 பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 பேரும் படகோட்டி குடும்பத்தினருடன் மொத்தமாக 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment