இலஞ்ச ஊழலும், சட்டப் பாதுகாப்பு முறையும்
(அப்துல் அஸீஸ், மனித உரிமைகள் அதிகாரி)
மானிட நாகரிகம் வளர்ச்சிபெற ஆரம்பித்ததும் சமூக அமைப்புக்கள் மட்டத்தில் உரிமைகள், ஜனநாயகம் என்பன பற்றிய விழிப்புணர்வோடு தகவல்களை அறிந்துகொள்ளும் தேவையும் முக்கியாமாக இருந்தது. இந்த வகையில் இலஞ்சம், ஊழல் பற்றி பாhப்போமாகவிருந்தால் இது பணத்தோடு மற்றும் கையாளப்படும் விடயம் அல்ல. ஒரு சேவையினைப் பெற வருகின்ற ஒருவரை சொந்த வேலைக்காக அனுப்புதல், பெண்களாகவிருந்தால் தகாத வார்த்தைகளை கூறுதல், மற்றும் உரிய காரியத்தை செய்து கொடுப்பதற்கு பேரம் பேசுதல், தகுதியானவர்கள் இருக்கும் போது தகுதியற்றவர்களுக்கு நிவாரணங்களை வழங்கள் மற்றும் நன்கொடை என்ற பெயரில் ஒரு தொகைப் பணத்தைப் பெறுவதையும் இதில் உள்ளடக்கலாம்.
ஊழல்கள் பட்டியலில் இலங்கை 76 வது இடத்தில் இருக்கிறது. ஊழல்கள் ஒழிக்கப்பட்ட நாடு எனக் கருதுவதாயின் 50 யிற்கு மேல் புள்ளிகளை ஒரு நாடு பெற வேண்டும். ஆனால் இலங்கை 34 புள்ளிகளைப் பெற்றுள்ளது என்பதால் ஊழல்கள் நிறைந்த நாடு என விமர்சிக்க முடியும்.
இலஞ்சம் என்றால் என்ன?
ஒரு அலுவலர் அவரது பதவியின் நிமித்தம் சிவில் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாது அதனை நிறைவேற்றித்தர வேண்டுமாகவிருந்தால் சில சலுகைகளை கேட்பது, பெற்றுக் கொடு;ப்பது அல்லது பெற்றுக் கொள்வது இலஞ்சமாகும். பொதுவாக அரச ஊழியராகவோ அல்லது வேறு யாராவது தனி நபராகவோ இருக்கலாம்.
இலஞ்சச் சட்டத்தின்படி, இலஞ்சம் பரிந்து கேட்பதற்கு ஏற்றுக் கொள்வதற்கு எத்தணி;க்கும் போது, அவற்றைப் புரிவதற்கான ஏதேனும் செயலொன்றைப் புரிகின்ற ஆளொருவர் இலஞ்சச் சட்டத்தின் கீழ் முதல் தவறுக்குரிய தண்டணைகளைப் பெறுவதற்கு ஆளாதல் வேண்டும்;. எவரேனும் ஆளின் துணையுடன் அல்லது இணக்கத்துடன் அவ்வாள் அல்லது வேறொருவருக்காக நேரடியாக அல்லது வேறு வகையில் ஏதாவது ஒன்றினை பெற்றுக் கொள்ளுதல் இலஞ்சம் எனக் கூறலாம்.
ஊழல் என்றால் என்ன?
ஊழல் என்பது தனியார் துறையில் அல்லது அரச துறையில் ஆட்களுக்கிடையில் நடைபெறுகின்ற பொதுச் சொத்துக்களை சட்ட விரோதமாக தனிப்பட்ட சொத்தொன்றாக ஆக்குதல் அல்லது ஒரு அலுவலர் அவருக்குரிய அதிகாரங்களை தனது சொந்த இலாபம் கருதி அதனை துஸ்பிரயோகம் செய்தல் அல்லது அரசாங்க உத்தியோகத்தர்கள் தனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாங்களை சொந்த நலனுக்காக அல்லது தனக்கு சார்பான ஒருவரின் நலனுக்காக பிழையான முறையில் அல்லது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திக் கொள்ளல் ஊழல் ஆகும்..
மோசடி என்றால் என்ன?
தனக்கு உரித்தில்லாத ஒன்றை தனக்குரியதாக மற்றவர்களுக்கு காட்டி தவறான வகையில் அதனைப் பெறுக் கொள்ளல். அல்லது காரணங்களை மறைத்து பெற்றுக் கொள்ளல்.
பதவிகளைப் பெற்றுக் கொடுப்பது மற்றும் முடிவுகளை மேற்கொள்ளும் போது தனது உறவுகளுக்கு, நண்பர்களுக்கு நன்மை பெறத் தக்க வகையில் முறையற்றவாறு இலாபம் பெறத் தக்கதாக நடவடிக்கை மேற்கொள்ளல் போன்றவற்றை மோசடியாகக் கருத முடியும்.
இலஞ்சம், ஊழலினால் ஏற்படும் விளைவுகள்
• அரச நிறுவனங்களில் செயற்றிரன், செயற்பாடுகள் நலிவடையும்
• சிறந்ததோர் அரச நிருவாகம் பாதிக்கப்படும்
• நாடு பொருளாதார ரீதியல் நகைப்புக்கும் வறுமைக்கும் ஆளாகும்
• பொருட்களின் விலை அதிகரிக்கும்
• சட்டம் மற்றும் சமூக நீதி பாதிப்;படையும்
• சமூக சீர்கேடுகள் உருவாகும்
• மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்ற முடியாமை
• குற்றங்களின் எண்ணி;க்கை அதிகரிக்கும்
தண்டணைகள்
ஏழு ஆண்டுகள் விஞ்ஞாத காலத்துக்கு கடுழிய மறியல் தண்டணை. ஐயாயிரம் ருபாவை விஞ்ஞாத ஒரு குற்றப் பணம்
மேற்கூறிய தண்டணைக்கு மேலதிகமாக இலஞ்சத்தின் பெறுமதிக்கு சமமான பணத் தொகையொன்றை தண்டப் பணமாக அறவீடு செய்தல் அல்லது குற்றப் பணத்தை அல்லது தண்டணப் பணத்தை விதிப்பதற்கு பதிலாக இலஞ்சத்தால் பெறப்பட்ட அசைவுள்ள அசைவற்ற ஆதனங்களை பறிமுதல் செய்தல்.
இழக்கின்ற விடயங்கள்
• ஒருவரின் தொழில் அல்லது அவரது பதவி இழத்தல்
• நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டால் அரசாங்கத்தில் தொழில் ஒன்றை பெறும் வாய்ப்பை நிரந்தரமாக இழத்தல்
• மக்களினால் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், உள்ளுராட்சி நிறுவனமொன்றின் உறுப்பினர் ஒருவராயின் அப் பதவியினை இல்லாதொழித்தல்
• பாராறுமன்ற தேர்தலாயின் ஏழு ஆண்டுகளுக்கும,; உள்ளுராட்சி மன்ற தேர்தலாயின் 5 ஆண்டுகளுக்கும் வாக்களிப்பதற்கும் தெரிவு செய்யப்படுவதற்கும் தகுதியின்மை.
பகிரங்க ஊழியர்; ஒருவராயின்
10 ஆண்டுகளை விஞ்ஞாத காலத்துக்கான மறியல் தண்டணை
ஓர் இலட்சம் ருபாவை விஞ்ஞாத ஒரு குற்றப்பணம் அல்லது மேற்கூறிய இரண்டும்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு
1994ம் ஆண்டின் 19ம் இலக்க சட்டத்தின் மூலம் இவ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது
ஆணைக்குழுவின் பணிகள்:
• இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு நபரையும் விசாரணை செய்தல்; பொருத்தமான நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்துதல்
• இலஞ்ச ஊழல் தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்றதும் அத்தகவல் தொடர்பில் ஆணைக்குழு திருப்தி காணும் பட்சத்தில் விசாரணைகளை மேற்கொள்ளும்.
• விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம்; ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது
• விசாரணைகளை மேற்கொள்ளும் போது தேவையெனக் கருதும் ஆதாரங்களை எழுத்து அல்லது வாய்மொழிமூல பெற்றுக் கொள்வதற்கும், பரீட்சிப்பதற்கும் அதிகாரம் உண்டு.
• விசாரணை நிமித்தம் ஆள் ஒருவரை ஆணைக்குழு முன்னிலையில் சமூகமளிக்க கோருவதற்கும் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடைகொடுக்கவும் தேவையான ஆதாரங்களை சமர்பிக்க கோரவும் அதிகாரம் உண்டு
• விசாரணைகளை மேற்கொள்ளும் போது எந்தவொரு வங்கி முகாமையாளருக்கும் குறித்த நபருடன் அல்லது அவரது மனைவி பிள்ளைகள், அவர் வழிநடாத்தும் கம்பனி அல்லது பங்காளராக இருக்கும் நிறுவனம் தொடர்பான வங்கி புத்தகங்கள் ஆவணங்கள், காசோலைகள், கணக்குகள் பற்றிய தகவல்களை எழுத்துமூல அறிவித்தல்மூலம் பெற்றுக் கொள்வதற்கும், பிரதிகளை பெறுவதற்கும் அதிகாரம் உண்டு.
• உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளரை குறித்த நபாருடன் அல்லது அவரது மனைவி பிள்ளைகள், அவர் வழிநடாத்தும் கம்பனி அல்லது பங்காளராக இருக்கும் நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை எழுத்துமூல அறிவித்தல் மூலம் பெற்றுக் கொள்வதற்கும், பெறுவதற்கும் அதிகாரம் உண்டு
• நிறுவன தலைவர்கள், உள்ளுராட்சி, மாகாண சபைகள், 51வீதம் அரச பங்குகளை கொண்ட கம்பனிகளை குறித்த நபருடன் தொடர்பான அல்லது அவரத கட்டுப்பாட்டில் உள்ள புத்தகங்கள், பதிவுகள், ஆவணங்கள் போன்றவற்றின் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை எழுத்துமூல அறிவித்தல் மூலம் பெற்றுக் கொள்வதற்கும், பெறுவதற்கும் அதிகாரம் உண்டு
• குற்றம்சாட்டப்பட்டவரினதும் மனைவி, பிள்ளைகளினதும் அசையும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் பதியப்படும். எப்போது, எவ்வாறு (அன்பளிப்பு, பரம்பரை வேறு..) பெறப்பட்டது
• குற்றம்சாட்டப் பட்டவரினதும் மனைவி, பிள்ளைகளினதும் அசையும் அசையாச் சொத்துக்களின் உரிமை, வட்டி வேறு நபர்களுக்கு மாற்றப்படுவது எழுத்துமூலக் கட்டளை மூலம் தடுக்கப்படும்.
• குடிவரவு குடியகல்வு கட்டுப்பட்டாளருக்கு எழுத்தமூல கட்டளை மூலம் குற்றம்சாட்டப் பட்டவரினது கடவுச்சீட்டு, ஏனைய பிரயாண ஆவணங்கள் 03 மாதங்களுக்கு மேற்படாத வகையில் தடுத்துவைக்கப்படும்
• குற்றம்சாட்டப்பட்டவர் இலங்கையை விட்டு வெளியேறாத வண்ணம் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் எழுத்தமூல கட்டளை இடப்படு;ம்
• இலஞ்ச குற்றத்துக்கு ஆதாரமாக கொள்ளக்கூடிய வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள், ஆவணங்கள், கணக்குகள் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியினால் தடுத்து வைக்கமுடியும்
Post a Comment