Header Ads



நோன்புப் பெருநாளுக்கு தயாராகும் காத்தான்குடி நகரம் (படங்கள் இணைப்பு)


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடிப் பிரதேசத்தில் பிரதான வீதியில் பூத்துக் குழுங்கும் எழில்மிக்க பேரீத்தம்பழ மரங்களில் வண்ண வண்ண நிறத்தில் சிறிய மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டு பிரதான வீதி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் வழிகாட்டலில் வருடா வருடம் ரமளான் இறுதிப் பகுதியில் குறித்த மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டு பிரதான வீதி அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டுள்ளதனால் காத்தான்குடி பிரதான வீதி சௌந்தர்யமிக்க நகரமாக காட்சி தருவதடன் அவ்வீதியினூடாக பயணிக்கும் பிரயானிகளையும் கவரச் செய்கின்றது.

3 comments:

  1. பெருநாளை எதிர்நோக்கி பிரதான வீதிக்கு மாத்திரம் இப்படி சௌந்தர்ய அலங்கார மின்விளக்குகளைப் பொருத்த வழிகாட்டும் நகர சபையின் சர்வாதிகாமுள்ள தவிசாளர், உள்ளக வீதிகளிலும் இவ்வாறு வெளிச்ச வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

    காத்தான்குடி உள்ளக வீதிகள் பலவும் வீதி அபிவிருத்தி என்ற பெயரில் வெட்டப்பட்டு குன்றும் குழியுமாக உள்ளன. அதனால் கடந்த நோன்பு நாட்களில் மக்கள் இரா வணக்க வழிபாடுகளுக்காகப் போக்குவரத்துச் செய்வதற்கு பெரும் சிரமப்பட்டனர்.

    டீன் வீதி அலியார் சந்தி போன்ற முக்கிய சந்திகளுக்காவது தவிசாளர் போய் பார்க்க வேண்டும்.

    பெருநாளைக் கொண்டாட வெளியூர்களில் இருந்து வருவோருக்கும், வீதியால் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கும் வெறுமனே 'ஷோ' காட்டுவதற்காக மக்களின் வரிப்பணத்தை இவ்வாறெல்லாம் விரயமாக்காமல் நிரந்தரமாக ஊரில் நகர சபைக்கு வரி கட்டி வாழும் மக்களுக்கு பிரயோசமாக நகரின் உள்வீதிச் சந்திகளிலும், சிறறொழுங்கைகளிலும் தெரு வெளிச்ச வசதியை ஏற்படுத்தினால் அது பாராட்டத்தக்கதாக இருக்கும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Maa Shaa Allah, wish you a Happay Eid Mubarak in advance.

    ReplyDelete
  3. This is not Sunnah we not allow follow Yahoodui Nasara

    ReplyDelete

Powered by Blogger.