மேர்வினின் திருமண அழைப்புக்கு நவநீதம்பிள்ளை எதிர்ப்பு - அரசு மன்னிப்பு கேட்டது
தன்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக, அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக் குறித்து, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அரசாங்கத்திடம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நவநீதம்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா கூறியது தொடர்பான, காணொலிப் பதிவு, ஐ.நா அதிகாரிகளால் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதைப் பார்த்த அவர், கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அரசாங்கத்திடம் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில், மேர்வின் சில்வாவின் கருத்துக்காக அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஹில்டன் விடுதியில் நடந்த வரவேற்பு நிகழ்வில், மேர்வின் சில்வாவின் கருத்துக்காக அரசின் சார்பாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, வருத்தம் தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையைத் திருமணம் செய்யத் தயார் என்று சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டு கருத்து, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

how can he marry more than one women.is he convert to islam
ReplyDeleteஅன்று இவரின் இந்த பேச்சிக்கு அரசு அது தனிப்பட்ட கருத்து, இத கருத்து சுந்ததிரம் உள்ள நாடு, ஜனநாயக நாடு யாருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு என சொல்லிகொண்டது. இன்று அதே அரசு மன்னிப்பு கேட்கிறது.
ReplyDeleteகருத்து சுதந்திரம், ஜனநாயக நாடு என்று சொல்லி கொள்ளும் அரசு தான் தமிழ் இணையங்களை தொடர்ச்சியாக தடை செய்கிறது ஆனால் ஒரு சிறுபான்மை இனத்தை தினமும் தூசிக்கும் ஒரு சில அமைப்பு சார்ந்த தளங்கள் எதோ இவர்களின் கண்களில் தெரிவது இல்லை.
அதே போல அம்மையாரை சந்தித்த ஒரு சிலரை இனம் தெரியாத நபர்களால் விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது எல்லாம் எங்க போனது கருத்து சுதந்திரம்? கருத்து சுதந்திரம் என்பது இலங்கையில் வெற்று கடதாசியில் மட்டுமே பார்க்கலாம்.
நன்றி !
சரியென்றால் மேர்வின் தான் மன்னிப்புகேட்கவேண்டும், ஏன் தான் எந்த நேரமும் இந்த மேர்வினை அரசாங்கம் காப்பாற்றுகின்றதோ தெரியவில்லை
ReplyDeleteThe state of the affair went to dog level
ReplyDelete