சிரியா தம் மீதும் தாக்கலாம் - இஸ்ரேலியர்கள் அச்சம்
அமெரிக்கா மற்றும் அதனது கூட்டு நாடுகளின் எவ்வகையான தலையீட்டிலும் தமது நாடு வெற்றிபெறும் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் உறுதி அளித்துள்ளார். “இந்த பிரச்சினை ஆரம்பமானது தொடக்கம் இதன் உண்மையான எதிரி தானாக வெளிப்படும் வரை நாம் காத்திரந்தோம்.
எமது மனோதிடம் உறுதியாக உள்ள நிலையில் எந்த தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தாய் நாட்டை பாதுகாக்க தயாராகவே இருக்கிறோம்” என்று அல் அக்பர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அஸாத் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே மேற்கு நாடுகள் சிரியா மீது வான் தாக்குதலை ஆரம்பிக்கும் பட்சத்தில் அதற்கு சிரியா பதில் நடவடிக்கைகளை எடுத்தால் தயாராக இருக்குமாறு தமது படையினருக்கு அழைப்பு விடுத்துள்ள இஸ்ரேல் மேலதிக ஏவுகணை அலகுகளையும் நிறுவியுள்ளது.
எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள ஆயுதப்படைகள் தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேலில் பதற்றத்துக்கான எந்த சமிக்ஞையும் கிடையாது என்றும் ஆனால் அங்கு விஷவாயுவைத் தடுக்கும் முக மூடிகளுக்காகவும் வடக்கில் வான் தாக்குதலுக்கான பங்கர்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதாகவும் அங்குள்ள பி.பி.சி. செய்தியாளர் கூறுகிறார்.

Post a Comment