Header Ads



மான் ஒன்றை சுட்டவருக்கு ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணை (படங்கள்)


(நஷ்ஹத் அனா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீயான்குளக்காட்டுப் பகுதியில் இன்று (21.08.203) மான் ஒன்றை சுட்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மீயான்குளக் காட்டுப் பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பை ஏற்படுத்திய பொலிஸார் கொள்ளப்பட்ட மானையும் குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வாழைச்சேனை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியதற்கிணங்க விசாரனைகளை மேற்கொண்ட வாழைச்சேனை நீதவான் நீதி மன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி சந்தேக நபர் குற்றத்தினை ஏற்றுக் கொண்டதற்கிணங்க ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.