கண்ணிர் விட்டு அழும் துருக்கி பிரதமர் (வீடியோ)
எகிப்தில் பதவியிலிருந்து முர்ஸி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடணப் படுத்தப்பட்டுள்ளது.
எகிப்து ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் முர்ஸியின் கட்சியின் பொதுச் செயலாளர் முஹம்மது பெல்தாகியின் மகள் அஸ்மா ஷஹீதாக்கப்பட்டார்
சிறையில் இருக்கும் முஹம்மது பெல்தாகி தன் மகளுக்கு கவிதை வடிவில் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட துருக்கி பிரதமர் எர்துகானிடம், வாசித்துக் காட்டப்பட்டது. கடிதத்தை படிக்கும் போது கவனமாக கேட்ட எர்துகானின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. சில நிமிடங்கள் மவுனமாக இருந்த எர்டோகன், பின்னர் கண்ணீரை துடைத்து விட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார்.
http://www.youtube.com/watch?v=OmtHW6_WQMk
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர். இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். (இறந்த பின், எவராக இருந்தாலும் பூவுலகிற்குத் திருப்பி அனுப்பப்படுவதில்லை என்பதால்) அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.
ReplyDeleteஅறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 3834