உலகில் சிறைக் கைதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலை
ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள 24 சிறைகளிலும் கைதிகளின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளதாக மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ளது.
கைதிகளுக்கு உணவு அளிப்பது, அபராதம் விதிப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது போன்ற அனைத்து சிறைக் காவலர்களின் வேலைகளையும் கைதிகளே மேற்கொள்கின்றனர். இது மட்டுமின்றி, சிறைக் கதவுகளுக்கான பூட்டுகளின் சாவிகளும் அவர்களிடத்தில் இருக்கின்றன. கைதிகளிடையே முக்கிய ஒருங்கிணைப்பாளராக விளங்குபவர்கள் தங்களுடைய அறைகளில் தொலைகாட்சிப் பெட்டி உட்பட அனைத்து வசதிகளையும் அனுபவிக்கின்றார்கள்.
சான் பெட்ரோ சுலா என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலையில் ஒரு வர்த்தக சந்தையே நடைபெறுகின்றது. இங்கு சலூன்கள், உணவகங்கள், கடைகள், விளையாட்டு மன்றங்கள், குளிர்பான விற்பனை மையங்கள் போன்ற அனைத்தும் உள்ளன.
மற்றொரு சிறைச்சாலையில் கைதிகள் போட்டிருக்கும் மஞ்சள் நிறக் கோட்டைத்தாண்டி சிறைக் காவலர்களே உள்ளே செல்லுவதில்லை. இது மரணக் கோடு என்று அவர்களால் குறிப்பிடப்படுகின்றது. இந்தத் தகவல்களை அரசு மறுக்கவும் இல்லை. இதுவே தற்போது அந்நாட்டின் மிகப் பெரிய பிரச்சினையாகவும் கருதப்படுகின்றது.
சனிக்கிழமை அன்று அங்குள்ள ஒரு சிறையில் கலவரம் ஏற்பட்டதால் அரசுத் துருப்புகள் அங்கு அனுப்பப்பட்டன. அப்போது சிறைகளின் நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை என்று குறிப்பிட்ட அந்நாட்டு அதிபர் போர்பிரியோ லோபோ, சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளின் பெருகி வரும் அதிகாரம் தொற்றுநோய் போல் அனைத்து சிறை அமைப்புகளையும் பாதித்து வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இத்தகைய கைதிகளின் அதிகாரத்தை அடக்குவதற்கான திட்டங்களை அரசு அதிகாரிகள் முன்வைப்பார்கள் என்று அதிபர் கூறியுள்ளார். கைதிகள் நாடு முழுவதிலுமிருந்து தங்களுக்குத் தேவையான வசதிகளைப் பெறுகின்றார்கள் என்று மனித உரிமைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளதை ஒப்புக்கொள்ளும் அரசு அதிகாரிகளும் இந்த அமைப்பு சீர்திருத்தப்படும் என்று உறுதியளிக்கின்றனர்.
neegalellam nalla irukkanum sar appathan nadu rommba sekkiraththula munerum. edukkum kinathu thawalaihal mathiri illamal veliya wara try pannunga
ReplyDeleteஇதை வெளியில் சொல்வதைவிட அன்னாட்டு அதிகாரிகள் பதவிகளிலிருந்து விலகிவிடுவதே மேல்..
ReplyDelete