சிரியாவை மேற்கு நாடுகள் தாக்குமா..?
சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் விஷக்குண்டுகள் தாக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்தனர். அதற்கான வீடியோ ஆதரங்களும் வெளியிடப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசு வீசிய விசக்குண்டு தாக்குதல்களில் 322 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்தலாமென சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதையடுத்து மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயுத்த நிலையில் உள்ளன. அமெரிக்க தலைமையில் இப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தாக்குதலை தொடுக்க தயாராக உள்ளனவாம்..!
Post a Comment