மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(ஜே.எம். வஸீர்)
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகம் சிங்கள மொழியில் மாத்திரம் உள்ளுராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும். ஊழியர்களுக்கும் உள்ளுராட்சியில் டிப்ளோமா என்ற பாடநெறியை நடாத்தி டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வந்த நிலையில் வரலாற்றில் முதற்தடவையாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலின் கீழ் தமிழ் மொழி மூலம் டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட்டு அப்பாடநெறியை நிறைவு செய்த 69 ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க தேசிய மாநாட்டு மண்டப கேட்போர் கூடத்தில் உள்ளுர் ஆளுகை நிறவத்தின் நிறைவேற்று அதிகாரி ஐ.ஏ. ஹமீட் அவகளின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து கொண்டு ஊழியர் ஒருவருக்கு டிப்ளோமா சான்றிதழை வழங்குவதனையும், அருகில் அமைச்சின் செயலாளர். ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க உள்ளிட்ட ஏனைய உயர் அதிகாரிகளையும் படங்களில் காணலாம்.
Post a Comment