சட்டத்தின் குறிக்கோள் நீதியை அடைதல் என்பதால் அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்
இன்று நாளுக்கு நாள் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது. சட்டம் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாளாந்தம் எமது வாழ்க்கையினை சட்டத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு நடாத்திச் செல்கிறோம். சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் முறைமை என்பதால் எவரும் மட்டுப்படு;த்த முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
தாறுல் ஹதீஸ் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட, உலமாக்களினதும், அரபிக் கல்லூரிகளின் உயர்வகுப்பு மாணவர்களுக்கான வதிவிட கற்கைநெறி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நிகழ்ந்தது. இச்செயலமர்வின் போது இலங்கைச் சட்டத்தின் நிலை பற்றி விரிவுரையாற்றிய அஸீஸ் மேலும் தெரிவிக்கையில்,
வேண்டுமென்றே சட்ட விதிகளை மதிக்காமல் அதனை மீறுபவர்கள் மிகவும் குறைவு. ஆனால் அறியாமை காரணமாக சிலர் சட்டத்தை மீறுவதால் அதன் பிடிக்குள் சிக்கிவிடுகின்றனர். இதனால் தண்டணை பெறுபவர்கள் சமுகத்திலிருந்து தூரமாக்கப்படுகின்றனர். ஆகையினால் நாம் அனைவரும் சட்டம் பற்றிய சகல விடயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டிய கடற்பாட்டிற்குள்ளாகிறோம்.
சட்டத்தை தெரிந்து கொள்வதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தும் அவற்றை பொது மக்கள் அறி;ந்து கொள்வதில் சிரமங்கள், நடைமுறைப் பிரச்சினைகள் காணப்படுகிறது. அத்துடன் போதியளவு அக்கறை காட்டுவதில்லை.
சட்டமானது சமுக மதிப்புகளையும், சமுகத்தில் வாழ்கின்ற மக்களின் நம்பி;க்கைகளையும் பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கி;ன்றது. சமூக நன்மைகள் மாற்றமடைவது போல் சட்டமும் மாற்றமடையும். காலத்தின் தேவை கருதி புதிய சட்ட திட்டங்கள் வருவது வரவேற்கத்தக்கது. இது மக்களின் நலன்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட வேண்டும்.
சட்டமானது அனைவருக்கும் சமனான வகையில் ஏற்புடையது, ஆனால் எவருக்கும் விதிவிலக்கு வழங்கப்படக்கூடாது. அவ்வாறு இருந்தால் மாத்திரமே சட்டத்தின் குறி;க்கோளாகிய நீதியை அடைதல் என்ற விடயத்தில் நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்படும்.
சட்டம்; சமூகத்தின் மக்களின் நடத்தையை கட்டுப்படுத்த பொதுவாக அரசியலமைப்பு, சட்டவாக்கங்கள், நீதித்துறை விளக்கங்களை அல்லது ஒழுங்கமைப்பதற்காக அதிகார பூர்வமான விதிகள் அல்லது ஒழுங்கு முறைகளின் தொகுப்பு என வரையறுக்க முடியும். பொதுவாக சட்டமென்பது சமுகத்தை கட்டுப்படுத்தும் ஒரு முறைமை.
இலங்கையில் சட்டமானது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தால் இயற்றப்படுகின்ற நியதிச் சட்டங்களையும், வழக்காறுகளையும், நீதிமன்றங்களால் வழங்கப்படும் முத்தீர்ப்புக்களையும் மூலங்களாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது.
இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்பதால் பல சமயங்கள், பல இனங்கள் இருப்பதால் பல்வேறு சட்டங்கள் நிலவுகின்றன. பொதுவான அரசியலமைப்புச் சட்டம் ஒரு நாட்டின் கண்ணாடி என வர்ணிக்கப்படுகிறது. அத்துடன் தனியார் சட்டங்கள் எமது நாட்டில் இன்னமும் வலுவில் உள்ளது. அது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.
1. கண்டியர் சட்டம்:
கண்டிய மாகாணத்தில் உள்ள ஒரு ஆணுக்கும் கண்டிய சட்டத்தால் ஆளப்படுகின்ற ஒரு பெண்ணுக்கும் இடையில் திருமணம் நிகழ்ந்தால் கண்டியச் சட்டத்தினை பயன்படுத்துவர்.
2. தேசவழமைச் சட்டம்:
யாழ் மாகாணத்துக்குட்பட்ட வழக்காறுகளை ஒன்றிணைத்து, யாழ்ப்பாண மாகாணத்தில் வசிக்கின்ற மலபார் வாசிகளுக்கு உரியது எனப்படுகின்றது.
3. முஸ்லிம் சட்டம்:
இஸ்லாமிய சட்டத்தின் தோற்றுவாய், அல்லாவினுடைய கட்டளைகளையும், நபிகளாரின் போதனைகளையும் அதனூடான வழிமுறைகளையும் கூறுகின்றது. திருமணம், விவாகரத்து, பராமரிப்பு மற்றும் வக்பு பற்றிய சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இது நவீனத்துவம் என்பதை விட இஸ்லாமியரின் கடமைப் பொறுப்புக்களையும், பண்புகளையும் கூறும் வழிகாட்டியாக உள்ளது.
Post a Comment