Header Ads



கால்வளால் நடக்கும் சுறாமீன் - இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

கால்களால் நடக்கும் சுறாமீன் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சுறா மீன்கள் ராட்சத அளவில் வளரக் கூடியவை. அவை மனிதர்களை தாக்கி உடல் உறுப்புகளை சிதைத்து உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியவை. அவை கடலில் நீந்தக்கூடியவை.

ஆனால் தற்போது மிகச் சிறிய கால்கள் மற்றும் செதில்களால் நடக்க கூடிய புதிய வகை சுறாமீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இந்தோனேசியாவின் கிழக்கு கடற்கரையில் மலுகு தீவில் உள்ள ஹால்மகிரா பகுதியில் உள்ளது.

மனிதர்களுக்கு தீங்கு இழைக்காத இந்த சுறா மீன்கள் பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளன. இது அதகபட்சமாக 80 செ.மீட்டர் நீளம் வளரக் கூடியவை.

No comments

Powered by Blogger.