ஒலுவிலில் முகாமிட்டுள்ள ரவூப் ஹக்கீம் குழுவினர்
ஒலுவில் துறைமுகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டம்பர் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள நிலையில், துறைமுக நிர்மாணத்தினால் பாதிககப்பட்ட அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி சம்மந்தப்பட்ட அமைச்சருக்கும், துறைமுக அதிகார சபை தலைவருக்கும் எடுத்து விளக்கி, அவற்றுக்குரிய தீhவுகளை காணும் பொருட்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் சனிக்கிழமை (31) ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
அமைச்சர் ஹக்கீமின் அழைப்பை ஏற்று துறைமுக அபிவிருத்தி அமைச்ச ரோஹித அபயகுணவர்த்தன, துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பந்து விக்கிரம ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதோடு மற்றும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் பங்குபற்றினர்.
இக்கலந்துரையாடலின்போது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், சுவிகரிக்கப்பட்டட காணிகளின் உரிமையாளர்களின் பிரச்சினைகள், கடலரிப்பினால் எதிர்நோக்கப்பகின்ற பிரச்சினைகள், பாதையொன்று மூடப்பட்டுள்ளதால் மீனவர்களும் ஏனைய பொரு மக்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் போன்றன விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக மீனவர் வாடிகள் பற்றியும் வள்ளங்களை நிறுத்தி வைப்பதற்கான இடம் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் விபரித்துக் கூறினார்.
சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான மதிப்பீட்டறிக்கை மற்றும் அவற்றின் உரிமை குறித்த சர்ச்சைகள் என்பனவே இழப்பீடுகளை வழங்குவதி; தாமதத்தை ஏற்படுத்தியதாக அமைச்சராலும், துறைமுக அதிகார சபைத் தலைவராலும் தெரிவிக்கப்ப்டடது.
இது தொடர்பில் பிரதேசச் செயலாளர், துறைமுக அதிகாரசபை அதிகாரிகள், மீன்பிடித் தணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
துறைமுகத்தால் பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கான இழப்பீடு இரண்டு வருடங்களுக்கு மாத்திமே வழங்கப்பட்டதாகவும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு இழப்பீடு வழங்கும் காலத்தை நீடிப்பது பற்றி கருத்திற்கொள்ளுமாறும் அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.
துறைமுக அமைச்சும் மீன்பிடி அமைச்சும் கூட்டாக ஓர் அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவைக்கு சமர்;பிப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர் ஐ.எம். ஹனீபா, கரையோரப் பாதுகாப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம். ஜசூர் அமைச்சர் ஹக்கீமின் சட்ட ஆலோசகரும் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் சலந்துகொண்டனர். பின்னா அவர்கள் ஒலுவில் துறைமுகத்தைச் சென்று பார்வையிட்டனர்.
I think this is a good move for the suffering People of Oluvil and we wish The Leader of SLMC and Justice Minister for taking an imitative to solve the Poor Fishermen’s and other Land issues and the day to day facing problem we also believe that this opening of Oluvil Harbor will bring prosper for the locals and also for the region for all communities. We should appreciate not only Minister Hakeem also Minister Rohitha Abeygunawardane and his good officers along with our Parlimentarian Faizal Cassim. May Allah give our Leader Hakeem to guide this Community on the right way. Good Work – Aquiel
ReplyDeletethis is nothing he is doing Rauf hakkeem trying to play game political he is a no.1 rubbish fellow.
ReplyDelete