Header Ads



பழைய பள்ளிவாசலிலேயே இனிமேல் தொழுகை - புதிய பள்ளிவாசலை கைவிட வேண்டும்

கிரண்பாஸ் பகுதியில் அமைந்திருந்த பழைய பள்ளிவாசலிலேயே இனிமேல் தொழுகையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

இன்று 11-08-2013 பிந்நேரம் பௌத்தசாசன அமைச்சில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பழைய பள்ளிவாசலில் அருகிலுள்ள அரச மரத்தை கொழும்பு மாநகர சபை மூலமாக வெட்டுவதற்கும், முன்னர் அப்பகுதியூடாக முன்னெடுக்கவிருந்த வாய்க்கால் திட்டத்தை கைவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து வழமை போன்று பழைய பள்ளிவாசலில் தொழுகைகள் நடைபெறுமெனவும் தீர்மானிக்கப்ட்டுள்ளது.

7 comments:

  1. iwanuwal solluramathi seyalpada muslimgal peithiyakangala ithuwanam anumpothu athukkupo athu wanam anumpothu ithukku po vittukodukkathe vittukodukkathe kadaisikku angem illama ingem illama rottu than kethi muslimgale viliththukkol

    ReplyDelete
  2. இந்த சம்பவத்திற்கு பின்னரும் அரசாங்கத்திற்கு வால் பிடித்துக் கொண்டு வயிறு வளர்க்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும், இப்போதும் மாகாண சபை தேர்தல் களத்தில் அரசு சார்பில் களமிறங்கியிருக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளையும் நாம் புறக்கணித்து அரசுக்கு நல்ல பாடம் புகட்ட ஒன்று படுவோமா?

    ReplyDelete
  3. very very good dear your right

    ReplyDelete
  4. முஸ்லிம் சமூகத்தை ஒருகுடையின்கீழ் கொண்டுவரக்கூடிய எந்தவொரு அமைப்பும் இலங்கையில் தற்போது இல்லை.முஸ்லிம்களின் நம்பிக்கைக்குப்பாத்திரமாக விளங்கவேண்டிய‌ அரசியலோ,உலமாக்களின் உலமா சபையோ அதற்குரிய பெருமானத்தை இழந்துவிட்டது.இதற்குரிய காரணங்களை எவ்வளவு அழுத்தியழுத்திச்சொன்னாலும் இவர்கள் அதனை உணர்ந்து கொள்ளப்போவதில்லை.சொல்லித்திருந்தியதாக வரலாறும் இல்லை.புதியதோர் தலைமை தோன்றி சமூகத்தை துரிதமாக வழிநடாத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை.இதற்கான தீர்வுகளை அரசியல் மாற்றமொன்றில்தான் எதிர்பார்க்களாம்.ஆனால் அரசியலின் மாற்றத்தை தற்போதைக்கு எதிபார்க்கமுடியாது.ஆனால் சிறுபான்மை முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை சட்டரீதியாக வென்றெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் உடனடித்தேவையாகும்.

    ReplyDelete
  5. நமது சமுகம் சார்ந்தவர்கள் கொஞ்சம் அரசிலிருந்து விலகி நமது உடன் பிரப்புகளுக்காக ஜனநாயக வழியில் அரசுக்கு நமது உரிமைகளை தெரியப்படுத்த முடியாதா ? நமது சமயம்தான் பெரிது என அரசியல் மேடைகளில் பேசுவது வெறும் உதட்டில் மட்டும்தனா

    ReplyDelete
  6. why are you struggling for a minor problem ? ? ? ?
    this is just another incident
    Anuradapura
    Mahiyangana
    Grandpass
    Next
    Next.....
    hunting will continue

    ReplyDelete
  7. Intha tarunattil muslimgal anniyargalukku vaakkalikka vendam enru panivai kettu kolhiren

    ReplyDelete

Powered by Blogger.