Header Ads



பெற்ற தாயை ஆட்டு கொட்டிலில் போட்டுவிட்டு சென்ற மகள்

நோயுற்று படுத்த படுக்கையான, 90 வயது தாயை கவனிக்க முடியாமல், பாழடைந்த கட்டடத்தின், ஆட்டு கொட்டிலில் போட்டு விட்டு சென்றார் பாசக்கார மகள்.

முதியோர் இல்லங்களும், வயதானவர்களுக்கான தனி குடியிருப்புகளும், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதற்கு, கொல்லம் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவமே சாட்சி. தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, கடைசி காலத்தில் வைத்து காப்பாற்றுவதற்கு, இன்றைய தலைமுறையினர் முன்வருவதில்லை; பாரமாக நினைக்கின்றனர் என்பதற்கு, இதுவே சான்று.கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில், குலத்துப் புழாவில், 90 வயதான மூதாட்டி ஒருவர், தன் மகள் - மருமகன் வீட்டில், சில ஆண்டுகளாக வசித்து வந்தார். இவருக்கு மகன் இருந்த போதிலும், அவர் கவனிக்க முன் வரவில்லை.மகளோ, தன் தாயை, தானே பார்த்துக் கொள்வதாகக் கூறி, வீட்டு வேலைக்கு உதவியாக வைத்து கொண்டார். ஆனால், சில நாட்களுக்கு முன் அந்த மூதாட்டிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். இது, மகளுக்கு பாரமாக போய்விட்டது. உடனே சகோதரனை அழைத்து, "தாயை தூக்கிச் செல்' என்று கூறியுள்ளார்; பெத்த மகனோ கண்டு கொள்ளவில்லை.

இதனால், பெத்த மகளும், தன்னால் முடியாது என்ற கூறி, தன் வீட்டு அருகே இருந்த, பாழடைந்த கட்டடத்தில், ஆடுகள் கட்டப்பட்டிருந்த கொட்டிலில் போட்டு விட்டார். இதை பார்த்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தலையிட்டுள்ளனர்; ஆனால், அப்பெண்ணின் உறவினர்களே ஆர்வம் காட்டாததால், உதவ நினைத்தவர்களும் பின் தங்கினர்.ஆட்டு கொட்டிலில் மூதாட்டி ஒருவர் அவதிப்படுவது பற்றிய தகவல் வெளியானதும், தன்னார்வ நிறுவனம் ஒன்று, அம் மூதாட்டியை தூக்கி சென்று, கொட்டாரக்கராவில் உள்ள முதியயோர் இல்லத்தில் சேர்த்துள்ளது.

1 comment:

  1. கியாம நாளின் அடையாளம் இதுஊம் ஒன்று ஒரு தாய் தன் எஜமானியை பெற்றடுப்பால்

    ReplyDelete

Powered by Blogger.