யா அல்லாஹ்..!
அல்-குர்ஆன் அருளப்பட்ட புனிதமிகு ரமழானை எங்களுக்கு ஆன்மீக ஈடேற்றங்களின்
மாதமாக அருளிய உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாவதாக.!
பசித்திருப்பதற்கும் தாகித்திருப்பதற்கும் அப்பால் புனிதமிகு நோன்பின்
மாண்புகளையும் ஆன்மீக பண்பாட்டு வரைமுறைகளையும் கற்றுத் தந்த உனது தூதர்
எமது தலைவர் அருமை நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது உனது ஸலாத்தும்
ஸலாமும் என்றென்றும் உண்டாவதாக!
உனது கருணையையும்
அருள் பாக்கியங்களையும் அடையாள படுத்துகின்ற முதலாவது பத்து நாட்களிலும்,
உனது பெரும் தன்மைகளையும் பவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் அடையாள
படுத்துகின்ற இரண்டாவது பத்து நாட்களையும் நோன்புடனும் இயன்றவரை நல்ல
அமல்களுடனும் கழித்த எங்கள் மீது அருள் கூர்ந்து எமது பாவங்களையும்
பலவீனங்களையும் குறை நிறைகளையும் மன்னித்து அருள் புரிவாயாக!
புனித அல்-குர்ஆன் அருளப்பட்ட ஆயிரம் மாதங்களையும் விட சிறந்த புனிதமிகு
லைலதுல் கத்ர் இரவை சுமந்துவரும் பத்திலே நாம் இருக்கின்றோம், யா
அல்லாஹ்..
நல்ல அமல்களைக் கொண்டு இந்த நாட்களையும் கழிக்க எமக்கு தவ்பீக்கு செய்வாயாக.!
அல்-குர்ஆனைக் கொண்டு எங்கள் ஆன்மாக்களையும், உள்ளங்களையும், அறிவு
ஆற்றலையும், செயற்பாடுகளையும் ஒளிபெறச் செய்வாயாக..! அல்-குர் ஆணின்
மாதமான ரமழான் சுமந்து வரும் சுப சோபனங்களுக்கு உரித்துடையவர்களாக எம்
அனைவரையும் ஆக்கியருளவாயாக.!
எங்கள் பெற்றாரகளது பாவங்களை
மன்னித்து அவர்கள் மீது ஈருலக வாழ்விலும் கருணை காட்டுவாயாக.! எமது உற்றார்
உடன் பிறப்புக்கள் மீது கருணை காட்டுவாயாக. ஏழை எளியோர், முதியோர்
அங்கவீனர் அனாதைகள் விதவைகள், நோய்வயப்பட்டிருப்போர் அனைவரையும் உனது அருள்
கொண்டு அரவணைத்துக் கொள்வாயாக.!
அல்லாஹ்வின் பாதையில் உழைப்போர்,
சமூகப் பணியில் உள்ளோர், சத்தியத்தின் வழி நடப்போர், தமது செல்வங்களை
சதக்காவாகவும் சக்கத்தாகவும் வரி வழங்குவோர் வாழ்வில் மென்மேலும்
பரக்கத்துச் செய்வாயாக.!
யா அல்லாஹ்.!
எங்களது வாழ்வினை
தூய்மைபடுத்துகின்ற அரணாகிய தீனில் எம்மை நிலைபெறச் செய்வாயாக, நாங்கள்
வாழுகின்ற இந்த துன்யாவை எமக்கு வளமானதாக ஆக்கியருள் வாயாக, நாங்கள்
மீளுகின்ற மறுமைய வாழ்வை எமக்கு சிறந்ததாக அமைத்தருள்வாயாக!
தீய
சக்திகளின் கெடுபிடிகளில் இருந்து இந்த உம்மத்தையும், நமது உயிர்
உடமைகளையும், கௌரவத்தையும், நமது பள்ளி வாயால் களையும் பாது காத்தருள்
வாயாக, நய வஞ்சகர்களிடமிருந்தும் சூழ்ச்சிகள் செய்வோரிடமிருந்தும் எங்களை
நீ பாதுகாப்பாயாக, நிர்க்கதியாய் நிராயுத பாணிகளாய் இருக்கும் உனது
அடியார்களை குறி வைப்போர் மீது உனது அத்தாட்சிகளை காண்பிப்பாயாக!
யா அல்லாஹ்!
புனித பைத்துல் முகத்தஸையும், பாலஸ்தீன் நாட்டையும்
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பாயாக, பாலஸ்தீன் மக்களை கொடிய யூதர்களின்
மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இருந்து பாது காப்பாயாக, முஸ்லிம்கள் மீது
ஆயுத அராஜகத்தை கட்டவிழ்த்துள்ள எதிரிகளை அழித்து ஒழித்து விடுவாயாக, தமது
உயிர் உடமைகளையும் தாய் மண்ணையும் மீட்கப் போராடும் போராளிகளை பாது
காப்பாயாக, அவர்களுக்கு உனது குத்ரத்தை கொண்டு உனது பட்டாளங்களைக் கொண்டு
உதவி புரிவாயாக, எல்லை கடந்த ஈமானிய உறவுகளை அரவணைக்கின்ற தலைவர்களை
முஸ்லிம் தேசங்களில் உருவாக்குவாயாக! நயவஞ்சக ஆட்சியாளர்களை ஒழித்துக்
கட்டுவாயாக.!
யா அல்லாஹ்,
இஸ்லாத்தினதும் முஸ்லிம்
உம்மத்தினதும் சதி வலைகளில் இருந்து முஸ்லிம் தேசங்களை காப்பாற்றுவாயாக!
அவர்களுக்கு துணைபோகும் நயவஞ்சக ஆட்சியாளர்களை தூக்கி எறியும் வல்லமையை
உண்மை விசுவாசிகளுக்கு வழங்குவாயாக! மத்திய கிழக்கில் முஸ்லிம்
உம்மத்திற்கு எதிராக எகிப்திலே இடம்பெறும் மிகப் பெரிய சூழ்ச்சியை தவிடு
பொடியாக்கிவிடுவாயாக, புனித ரமழான் மாதத்திலே அவர்கள் மேற்கொண்டுள்ள
போராட்டத்தை அங்கீகரித்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியை நீ
வழங்குவாயாக!
யா அல்லாஹ்,
எமது ஹலாலான ஆசைகள் தேவைகளை
நிறைவேற்றியருள்வாயாக, கவலை, நிம்மதியின்மை, வறுமை, கோழைத்தனம், கடன்
தொல்லை , நன்றி மறுக்கும் குப்று, கருமித்தனம் என்பவற்றிலிருந்து நாம்
உன்னிடம் பாது காவல் தேடுகின்றோம்!
பெருமை, பொறாமை, பேராசை,
இரும்மப்பு, நயவஞ்சகம்,இக்லாசின்மை போன்ற தீய உள நோய் களில் இருந்து எமது
உள்ளங்களை பரிசுத்தப் படுத்துவாயாக, அத்தகைய நல்ல உள்ளங்கள் போன்று
விசுவாசிகளுக்கு மகிழ்ச்சி தரும் இல்லங்களாக எமது வாழ்விடங்களை ஒளி பெறச்
செய்வாயாக!
பொறுமை, நளினம் ,நிதானம் ,காருண்யம் உளத்தூய்மை,
விட்டு கொடுக்கும் ,மன்னிக்கும் மனப் பான்மை, இறையச்சம், உயரிய மானுட
குணாதிசியங்கள் கொண்டு நமது வாழ்வை அலங்கரிப்பாயாக!
திருப்திப்
படாத நப்சு, நல்லவற்றை செவி மடுக்காத காது, உன் தியானத்தில் கண்ணீர் விடாத
கண்கள் என்பவற்றிலிருந்து உன்னிடம் அபயம் தேடுகிறோம்!
எங்களில்
நோய் வாய்ப் பட்டிருப்போர் மீது நீ கருணை கொண்டு பூரண ஆரோக்கியத்தை
தந்தருள்வாயாக, ஏழை எளியோர்,அனாதைகள், விதவைகள், வலது குறைந்தோர் மீது
கருணை காட்டும் உள்ளங்கள் மீது உனது அருள் மாரியை சொரிவாயாக!
கல்வியில் தொழில் தேடும் முயற்சியில் இருக்கும் யுவதிகள்,இளைஞர் மீதும்,
உற்றார் பெற்றார் உறவினரை வாழ வைப்பதற்காய் கடல் கடந்து கஷ்டப் பட்டு
உழைக்கும் இளைஞர் யுவதிகள் மீதும் கருணை கொண்டு அவர்களது இன்மையிலும்
மறுமையிலும் வளம் சேர்ப்பாயாக!
எம்மோடு வாழுகின்ற எமது தாய்
தந்தையர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் அனைவர் மீதும் நீ உன் அருள்
பாக்கியங்களை வாரி வழங்குவாயாக!
யா அல்லாஹ்,
எங்களை பெற்று
வளர்த்து ஆளாக்கிய எங்கள் பெற்றோர்கள் மீது கருணை காட்டுவாயாக, அவர்களது
நற்செயல்களை அங்கீகரித்து பாவங்களை மன்னித்தருள்வாயாக, அவர்களுக்கு நீண்ட
ஆயுளையும் பூரண ஆரோக்கியத்தையும் ,மன நிம்மதியையும் அருள் வாயாக! எங்களை
விட்டுப் பிரிந்திருந்தால் அவர்களை நீ அங்கீகரித்து உனது ஜன்னத்துல்
பிர்தௌசில் ஆலா எனும் உயர் சுவன வாழ்க்கையை வழங்குவாயாக! வாழ்வின் பிடியில்
இருப்பின் எம்மால் இயன்றவரை அவர்களுக்கு பணி புரிந்து அவர்களை பேணிக்
காக்கும் பேற்றை தந்தருள்வாயாக!
எமது மனைவி மக்கள் சகோதர
சகோதரிகள் எல்லோரையும் உனக்கு பொருத்தமான வாழ்வினை வாழ்ந்து ஈருலக அருள்
பாக்கியங்களையும் பெறக் கூடியவர்களாக ஆக்கி விடுவாயாக! எல்லா வித தீய
சக்திகளில் இருந்தும் இந்த உம்மத்தை நீ பாது காப்பாயாக! பலவீனங்களோடும்
குறைகளோடும் வாழும் எமக்கு சீரிய சிந்தனைகளையும் நேரிய வழி முறைகளையும்
உதிக்கச் செய்வாயாக!
கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாகிய
இறைவனே! எங்கள் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. எங்கள்
எந்தக் குறையையும் மறைக்காமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கவலையையும்
சந்தோஷப்படுத்தாமல் விட்டு விடாதே. எங்கள் எந்தக் கடனையும் நிறைவேற்றாமல்
வைத்து விடாதே. எங்களுக்குப் பயனுள்ள ஈருலக எந்தத் தேவைகளையும்
நிறைவேற்றாமல் விட்டுவிடாதே.
உன் மீதும் உனது உத்தம அடியார்
கண்மணி ரசூலுல்லாஹ் முஹம்மத் ஸல் அவர்கள் மீதும் உண்மையான அன்பினை எமது
உள்ளங்களில் ஏற்படுத்தி எமது அகத்தையும் புறத்தையும் உனது குரானின் ஒளியைக்
கொண்டு பிரகாசிக்கச் செய்வாயாக!
ameen
ReplyDeleteAameen. Nice dua..
ReplyDelete