Header Ads



மீண்டும் குனூத் ஓதப்பட வேண்டுமா..? உலமாக்களின் கருத்துக்கள் என்ன..??

(ஜே.எம்.ஹாபீஸ்)

கடந்வாரம் இதே இணையத்தில் வெளியான ஒரு குறிப்பில் அன்று 'அனுராதபுரம் முதல் தம்புள்ளை வரை, பின்னர் தம்புள்ளை முதல் மஹியங்கனை வரை, அதன் பிறகு அத்தெட்டிய வரை ... நாளை எப்படி அது வருமோ? தெரியாது என்று எழுதி இருந்தோம்.

அதுவும் நடந்தாகிவிட்டது.

இப்படி நாளுக்கு நாள் புதுக்கதை. போதாமைக்கு இறைச்சிக்கடை விவகாரம். எனவே இப்படி பல்வேறு அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் சொன்னார் 'மீண்டும் ஐவேளையும் குனூத் ஓதப்பட வேண்டும்' என்று. ஏன் என வினவினேன். அவர் சொன்ன பதில் பின்வருமாறு,

ஈமான் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் எமக்கு சமய நம்பிக்கை ஆணித்தரமாக இருக்க வேண்டும். அப்படியாயின் இறை நாட்டப்படி நல்லது நடக்கும் என்றார். அப்டி உறுதியான ஈமானை எல்லோரிடத்திலும் எதிர்பார்க்க முடியுமா? எனக் கேட்ட போது அவர் கூறினார். 'நாம் குனூத் ஓதிவந்த போது ஏதோ அதன் பலன்கள் இருந்தன. ஏனென்றால் முஸ்லீமான சிலருக்கே குனூத் ஓதப்படும் விவகாரமோ அல்லது அதன் பலாபலன்களோ தெரியாத நிலையில் இருக்க, நாட்டின் தலைவர் முதல் மற்றும் சில சக்திகள் குனூத் ஓதுவதை நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்தென்றால் ஆகக் குறைந்தது உள ரீதியிலாவது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். எனவே அதை இன்னும் சில காலத்திற்கு ஓதவேண்டும் என்பது அவர் வாதமாகும்.

இன்னும் ஒருவர் கூறினார் அப்படி இல்லாத ஒன்றை ஏற்படுத்துவது 'பித்அத்தில்' சேர்ந்து விடுமோ என்று பயமாக இருப்தாகக் கூறினார்.

இன்னொறு உலமாவிடம் இது பற்றிக் கேட்ட போது சில நெருக்கடியான கட்டங்களில் அதனை நபி (ஸல்) ஓதியதாக ஆதாரங்கள் உள்ளன என்றார். இன்னொறு பொதுமகன் சொன்னா விடயம் 'அதுவும் சரிதான்' என்று எனக்குத் தோன்றியது. அதாவது,

இந்த அக்கிரமம் தொடர்பாக எம்மால் ஒன்றும் செய்யமுடியாதுள்ளது. ஒரு பாம்பைக் கண்டால் அல்லது ஒரு நாயைக் கடண்டால் ஒரு கல்லை எடுத்து வீசுகிறோம். அதனால் நடப்பது ஒன்றுமில்லை. ஆனால் எமக்கு ஒரு உள்ளத் திருப்தி ஏற்படுகிறது. எதிரிக்கு நாம் தயார் நிலையில் இருக்கிறோம் என்ற ஒரு எச்சரிக்கையை விடுக்கப்படுகிறது. குறைந்தது அதுவாவது நடக்கிறதே என்றார்.

பள்ளியில் தொழுகையை முடித்து விட்டு வெளியேறும் போது எமது உள்ளக் குமுறலை வெளிப் படுத்திய ஒரு திருப்தியில் அல்லது மக்காவில் சைத்தானுக்குக் கல்லடித்த மாதரியான ஒரு திருப்திடன் நாமும் ஏதோ செய்து விட்டோம் என்ற உள்ளத் திருப்தி உடன் வெளியேறுகிறோம். எனவே இன்னும் சில காலத்திற்கு மீண்டும் குனூத் ஓதப்படவேண்டும் என்றார்.

இவை அனைத்தும் தனிநபர்கள் முன்வைத்த கருத்துக்களாகும்.

எனவே இது தொடர்பாக உலமாக்களின் கருத்துக்களை  எதிர்பார்த்து முடிக்கிறேன்.

3 comments:

  1. இனியும் எமது அரசியல்வாதிகளை நம்பி பயன் இல்லை, இந்த அரசாங்கத்தை நம்பியும் பயன் இல்லை. இவற்றிக்கு பின்புலமாய் இருப்பவர்களே. ராஜபக்க்ஷ குடும்பம் தான். காடையர்களுடன் சண்டையிட்டு ஜெயிக்க முடியாத கோழைகள் அல்ல நாங்கள். ஆனால் ஆட்சியை தொடர்வதற்கான யுக்தியாக இதனைத்தான் ராஜபக்க்ஷ குடும்பம் எதிர்பார்க்கின்றது. எனவே, இக்கட்டான சோதனை, துன்பம் வருகின்ற காலங்களில் நபியவர்கள் குனூத் ஓதி இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். எனவே நாமும் வேற்றுமைகளை மறந்து முஸ்லிம் சமுதாயம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு குனூத் ஓதி இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டேயிருப்போம். இந்த அநியாயகாரர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை இறங்கும் வரை.أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون. இன்னல் வருகின்ற போது அழைப்பவர்களுக்கு பதில் கொடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி யாருமுண்டோ? ஆயின் பிரார்த்திப்போம். பின்னர் தர்ப்பாதுகாப்புக்காகவாவது களமிறங்குவோம்.

    ReplyDelete
  2. அல்லாஹ்விடம் உங்கள் குறைகளைக்கேட்பதற்கும் பிரார்த்திப்பதற்கும் நீங்கள் யாரிடமாவது அனுமதி கேட்கவேண்டுமென்று நினைக்கின்றீர்களே இது மார்கத்தில் சிர்க் என்ற விடயத்தில் வரும்போலில்லையா? நான் சொல்வது தவறென்றால் தெளிவு படுத்துங்கள்.

    ReplyDelete
  3. அஸ்வரும் பைசல் முஸ்தபாவும் மஹிந்தவிடம் அனுமதி பெரும் வரை கொஞ்சம் பொறுங்க..மஹிந்த ஓத சொன்ன பிறகு குனூத் ஓதுங்க..!

    ReplyDelete

Powered by Blogger.